பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குஞ்சி

133

குடிக்காடு




குஞ்சி = ஆண்மயிர், மயிர், கொடி நடும்குழி, யானை, தலை, குன்றி, குடிமி, விருது
குஞ்சிகை = மயிர்முடி
குஞ்சிதம் = வளைவு
குட = வளைந்த
குடகம் = மேற்கு, ஒருமலை
குடகன் = சேரன்
குடக்கனி = பலாப்பழம்
குடக்கு = மேற்கு
குடக்கோ = சேரன்
குடங்கர் = குடம், குடிசை, கும்பராசி
குடங்கல் =வளைவு
குடங்கை = உள்ளங்கை
குடசம் = மலை மல்லிகை
குடச்சூல் = ஒருவகைச் சிலம்பு
குடஞ்சுட்டவர் = இடையர்
குடஞ்சுட்டு= பசு, ஒரு குடம் பால் தரும் பசு
குடத்தி = கழுதைப் புலி, இடைச்சி
குடந்தம் = கை குவித்து உடம்பை வளைத்து நிற்றல், (இது ஒரு வகை வழிபாடு)
குடந்தை = கும்பகோணம்
குடமூக்கு = கும்பகோணம்
குடமுழா = ஒருவகை வாத்தியம்
குடம் = பசு, குடம், மருத நில ஊர், மாயன் ஆடிய கூத்து, சேரநாடு, வெல்லம், திரட்சி
குடம்பை = முட்டை, பறவைக் கூடு
குடலை = பூக்கூடை, கிணற்றுக் கூடை
குடவம் = பித்தளை
குடவர் = இடையர்
குடவுதல் = வளைதல்
குடா = வளைவு, முலை
குடாது = மேற்கிலுள்ளது, மேற்கு
குடாரம் = தயிர் கடைதாழி, கோடரி
குடாரி = கோடரி, யானையை அடக்கும் அங்குசம்
குடாவடி = கரடி
குடான்னம் = சருக்கரைப் பொங்கல்
குடி = கோத்திரம், ஊர், குடிமக்கள், பருகுதல், குலம், புருவம், வீடு
குடிகை = பர்ணசாலை, கோயில், கமண்டலம், ஏல அரிசி
குடிகோள் = சூழ்ச்சி செய்து குடிகெடுத்தல்
குடிக்காடு = ஊர்