பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குரு

138

குலாங்கனை



குரு = மேன்மை, கனம், வியாழன், நிறம், வேர்க்குரு, ஒரு வியாதி, தந்தை, குரு, இரசம்
குருகு = உலைத்துருத்தி, உலைமூக்கு, நாரை, குருக்கத்தி, கோழி, கைவளை, சேவல், அன்னம், கொக்கு, அன்றில், பறவை, வெண்மை, பானை, மூளை, மூலநாள்
குருகுலவாசம் = மாணாக்கர் ஆசிரியருடன் வசித்தல்
குருகை = திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி
குருடன் = சுக்கிரன்
குருணி = ஒரு மரக்கால் அளவு
குருத்து = வெண்மை, மூளை, இளமை
குருநாதன் = சுவாமிநாதன்
குருந்து = குழந்தை, குருந்தமரம்
குருபன்னி = குருமனைவி
குருபூசை = இறந்த குருவின் நினவுக்காகச் செய்யப்படும் அன்னதானம் குருமலை = சுவாமிமலை
குருமித்தல் = குழங்குதல்
குருமூர்த்தம் = தெய்வம் குருவாக வருதல்
குருமை = பெருமை, நிறம்
குரும்பை = தெங்கின் இளங்காய், பனையின் இளங்காய், நுங்கு
குருலிங்கசங்கமம் = குரு, சிவம், அடியார்
குருவித்தலை = மதில்உறுப்பு
குருளை = குட்டி
குரூஉ = கனம், குரு
குரூரம் = கொடுமை
குரை = ஒலி, குதிரை, பெருமை, ஓசை
குரோசம் = கூப்பிடுதூரம்
குரோதம் = கோபம், விரோதம்
குரோதன் = வீரபத்திரன்
குலப்பரத்தை = ஒருவற்கே உரிமை பூண்ட கணிகை
குலமீன் = அருந்ததி
குலமுதல் = மகன், குலதெய்வம், மூலபுருஷன்
குலவுதல் = உலவுதல், பொருந்துதல், மகிழ்தல்
குலம் = குடி, கூட்டம், அழகு, மலை, கோயில், மூங்கில், மேன்மை, இனம், வீடு
குலா = மகிழ்ச்சி
குலாயம் = பறவைக் கூடு
குலாமர் = உலோபிகள், அடிமைகள்
குலாங்கனை = உயர் குடியினள்