பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குலாலன்

139

குழூஉ



குலாலன் = குயவன்
குலாவுதல் = விலக்குதல், மகிழ்தல், நட்பாடல், பிணைதல்
குலிகம் = சிவப்பு
குலிங்கம் = ஊர்க்குருவி
குவிசம் = இடி, வச்சிராயுதம்
குலிசி = இந்திரன்
குலிரம் = நண்டு
குலீரம் = நண்டு
குலை = செய்கரை, வரம்பு, பூங்கொத்து, குலை, ஈரல், நடுக்கம், கொத்து, பாலம்
குலைதல் = கலைதல், அழிதல், அவித்தல், நடுங்கல், குழைதல், வருந்தல்
குல்லகம் = வறுமை
குவடு = திரட்சி, மலை, மலையுச்சி
குவலயம் = பூமி, குவளை, நெய்தல்
குவவு = பெருமை, திரட்சி
குவளை = கருங்குவளை, செங்குவளை, ஒரு பேரெண், கண்குழி
குவால் = கூட்டம், அதிகம், மேடு
குவி = சுவர்
குவிந்தன் = சேணியன்
குவை = குப்பை, கூட்டம், மேடு, திரட்சி, பொன்னுருக்கும் குகை
குழ = இளமை
குழகன் = முருகன், இளையோன், இணங்குபவன், அழகன்
குழகு = இளமை, குழந்தை, அழகு
குழங்கல் = ஒரு மாலை
குழமகன் = இளமைத் தலைவன், மரப்பாவை
குழல் = கூந்தல், புல்லாங்குழல், ஒருமீன்
குழவி = குழந்தை, குட்டி, இளமை, யானைக்கன்று
குழுவு = இளமை
குழறுபடை = தடுமாற்றம், தாறுமாறு
குழாஅல் = கூடுகை
குழாம் = கூட்டம், திரள்சபை
குழி = பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு, கிழங்கு, நீர்நிலை
குழிசி = பானை
குழிப்பு = சந்தக்கவி, தாழ்வு
குழு = கூட்டம்
குழுமல் = முழங்கல், கூடுதல், கூட்டம்
குழுமுதல் = கூடுதல்
குழும்பு = குழி, திரள்
குழூஉ= கூட்டம்