பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழுஉக்குறி

140

குறள்



குழுஉக்குறி = ஒரு கூட்டத்தார்க்குள் ஒரு பொருளைக் குறிக்க வழங்கிக் கொள்ளும் சொல்
குழை = காது குண்டலம், சேறு, தளிர், துளை, குழாய், நெய்தற்பூ
குழைசாந்து = சுண்ணாம்பு
குழைச்சு = முடிச்சி, எலும்பின் சந்து
குறைதல் = இளகுதல், கலங்குதல், வளைதல், வாடல், துவளுதல், வருந்துதல்
குழைவு = இரக்கம், வாடுதல், நெகிழ்தல்
குழைமுகப்புரிசை = அந்தப்புரம்
குளகம் = புற்று, மரக்கால், பல பாட்டுக்களுக்கு ஒரு வினை முடிபு வரப் பாடப்படும் பாடல்
குளகன் = வாலிபன்
குளகு = தழை
குளம் = நெற்றி, வெல்லம், குளம், மார்கழி
குளவி = காட்டு மல்லிகை, ஒரு வண்டு
குளிகை = மாத்திரை
குவிசம் = வளையம், சக்கரம், வரைந்த தகடு
குளித்தல் = தைத்தல், தோல்வியுறுதல், மறைதல், அழுந்துதல்
குளிபம் = உண்டை, மருந்து, வேங்கைப்புலி
குளிர் = அரிவாள், கவண், கிளிகடி கருவி, நண்டு, குடமுழவு, நடுக்கம், குளிர்ச்சி
குளிர்தல் = இறத்தல், இன்மையாதல்
குளிறு = சபதம்
குளீரம் = நண்டு
குளுவன் = குறவன், நண்பன்
குளுவை = வறுமை, குறள்
குறங்கு = தொடை
குறடா = சவுக்கு
குறடு = செருப்பு, மரத்துண்டு, திண்ணை
குறம் = குறி, குறத்திப் பாட்டு
குறவஞ்சி = குறத்திப்பாட்டு, குறத்திப் பெண்
குறழ்தல் = குனிதல்
குறளி = ஒரு பிசாசு, கற்பிழந்தவள்
குறளை = கோள்சொல்லல், நிந்தனை, சுருக்கம், வறுமை
குறள் = குறுமை, சிறுமை, பூதம், திருக்குறள், குறள் வெண்பா