பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறி

141

குறைநேர்தல



குறி = நன்னடத்தை, ஞானம், தரம், சபை, காரணம், இலக்கு, ஒழுக்கம், லட்சணம், நோக்கம், அடையாளம், மதக் கொள்கை, குறிகூறல், பெயர்
குறிக்கோள் = அறிவு, மன ஒருமை, ஞாபகத்தில் வைத்தல், ஒற்றுமை, கிரகித்தல், அறியும்திறன்
குறிச்சி = குறிஞ்சிநில ஊர்
குறிஞ்சி = மலையும் மலை சார்ந்த இடங்களும், மலை, ஒரு பண்
குறித்தல் = கருதல் ஆராய்தல், நியமித்தல், வரைதல், சுட்டுதல்
குறிப்பு = ஒற்றுமை, சைகை, கருத்து, விருப்பம், இலக்கு, அடையாளம், சுருக்கம்
குறியீடு = பெயரிடுதல்
குறியெதிர்ப்பை = அளவு சுட்டிப் பெற்றுப் பின் பெற்றவாறே திருப்பிக் கொடுத்தல்
குறுகலர் = பகைவர்
குறுக்கை = புலி, உடைவாள்
குறுங்கண் = சன்னல்
குறுங்கிண்ணி = வெண்கலம்
குறுணி = எட்டுப்படி அளவை
குறுணை = சிறு நொய்
குறுதல் = மேலிருத்தல், பறித்தல், குத்தல், தறித்தல், நீங்குதல்
குறுநடை = தளர் நடை
குறுநர் = களை எடுப்போர்
குறுந்தாட்டு = குறுகிய தாளை யுடையது
குறுமுனி = அகத்தியர்
குறுமை = சிறுமை, அணிமை
குறும்பர் = வேடர், குறுநில மன்னர்
குறும்பிடி = உடைவாள்
குறும்பு = பகை, அரண், சிறுமை, பொல்லாங்கு, குறுநிலமன்னர், பாலை நிலத்தூர், வலிமை, கானவர், சீறூர்
குறும்பூழ் = காடை
குறும்பொறி = உதரபந்தம்
குறும்பொறை = காடு, குறிஞ்சி நிலத்தூர், சிறுமலை, மலை
குறுவாழ்க்கை = வறுமை
குறுவிலை = வறுமை, பஞ்சம்
குறை = காரியம், குற்றம், கடன், வேண்டுகோள், கட்டை, வறுமை
குறைகோள் = யாசித்தல்
குறைத்தல் = வெட்டுதல்
குறைதேர்தல் = குறையை நீக்க உடன்படுதல்