பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கே





கேகையம்=மயில், அசுணமா, ஒரு தேசம்
கேகி = மயில்
கேகை = ம்யில் குரல்
கேசபந்தி = மயிர் ஒழுங்கு
கேசபாரம் = பெண்மயிர்
கேசம் = மயிர், வேர்
கேசரம் = குங்குமப்பூ, பூந்தாது, மகிழமரம், வண்டு
கேசரர் = வித்தியாதரர்
கேசரி = குதிரை, சிங்கம், புன்னை
கேசவம் = பெண்வண்டு
கேசவன் = திருமால், சோழன்
கேசாதிபாதம் = தலைமுதல் கால்வரை
கேசாரி = குதிரையின் கழுத்து மயிர்
கேடகம் = பரிசை, பலகை
கேடயம் = பாசறை, பரிசை
கேடம் = சிற்றுார், மலை மிக்க ஊர்
கேடு = வறுமை, சிதைவு, அழிவு, குறைவு
கேட்டுமுட்டு = சைனர்க்குரிய ஒரு தீட்டு, கேட்டதனால் வரும் குற்றம்
கேட்டை = மூதேவி
கேணி = கிணறு, குளம், அகழி

கேண்மை = சினேகம், உரிமை, அன்பு, தாட்சண்யம், உறவு, நட்பு
கேதகை = தாழை
கேதம் = துக்கம், துன்பம், இளைப்பு
கேதல் = அழைத்தல்
கேதனம் = துணிக்கொடி, அடையாளம்
கேதாரம் = மயில், ஒரு சிவதலம், ஒர் இராகம்
கேதாரி = குதிரைப் பிடரி
கேது = ஒளி, அடையாளம், விருதுக்கொடி, கேதுக்கிரகம்
கேத்திரபாலன் = வயிரவன்
கேத்திரம் = பூமி, மனைவி, விளைநிலம், க்ஷேத்திரம், உடம்பு
கேத்திரி = விஷ்ணு,
கேயம் = அகழ், இசைப்பாட்டு
கேயூரம் = தோள் அணி
கேரண்டம் = காக்கை
கேரளன் = சேரன்
கேவணம் = மணி பதிக்கும் குழி
கேவலஞானம் = மூன்று காலங்களையும் உணரும் உணர்ச்சி

அ-19.