பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபாவம்

12

அமர்


அபாவம் = நிலையாமை, இல்லாமை
அபிசாரஹோமம் = மரணத்தைக் கருதிச் செய்யப்படும் யாகம்
அபிதாநம் = பெயர்
அபிநயம் = கையையும் மெய்யையும் காட்டி மனக்குறிப்பை வெளியிடுதல்
அபிநிவேசம் = விடாமுயற்சி
அபிமதம் = சம்மதம், விருப்பம்
அபிமுகம் = எதிர்முகம்
அபியுக்தன் = அறிஞன்
அபிராமம் = அழகு, விருப்பம்
அபிராமி = பார்வதி
அபிலாட்சை = விருப்பம்
அபுத்தி = அறியாமை
அபித்திபூருவம் = அறியாமல் செய்தது
அபூதம் = இல்லாத பொருள்
அபேட்சை = எதிர் பார்த்திருத்தல், விருப்பம்
அப்சரசு = தேவருலகவேசி
அப்தம் = வருஷம்
அப்தி = கடல்
அப்பர் = திருநாவுக்கரசு நாயனார்
அப்பியங்கம் = எண்ணெய் தேய்த்தல்
அப்பிரதட்சினம் = இடப்பக்கமிருந்து வலப்பக்மாகச் சுற்றிவருதல்
அப்பிரமேயம் = அளக்கப்படாதது
அப்பிரமேயன் = கடவுள்
அப்பு = நீர், கடவுள்
அப்புது = யானைப் பாகன், யானையை அதட்டும் ஓசை
அப்பை = கொன்றை, சிறு மீன் வகை
அமணர் = சமணர்
அமண் = சமண மதம், ஆடை இன்மை
அமண்பாழி = அமணர் கோவில்
அமயம் = காலம்
அமரப்பக்கம் = தேய்பிறைக் காலம்
அமரம் = வடமொழி நிகண்டு, கண்ணோய், படகின் பின் பக்கம்
அமரர் = தேவர்
அமரார் = பகைவர்
அமராவதி = இந்திரலோகத் தலைநகர்
அமரி = துர்க்கை, அமிர்தம், சிறுநீர்
அமரேசன் = இந்திரன்
அமர் = போர், அமைதி, விருப்பம்