பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொ


கொகுடி = முல்லைக் கொடி வகை
கொக்கரை = வலம்பபுரிச் சங்கு, வளைவு, வில், வலை, பாம்பு
கொக்கு = குதிரை, ஒரு பறவை, செந்நாய், மாமரம், மூல நாள்
கொங்கன் = சேரன்
கொங்காணி = தென்னையோலைக் கூடு
கொங்கு = தேன், கள், பூந்தாது, சேரன் ஆண்ட தேசம், வாசனை
கொங்கை = முலை
கொச்சை = இழிவு, கீழ்மை, திருந்தாப் பேச்சு, வெள்ளாடு, சீர்காழி
கொஞ்சுதல் = ஒலித்தல், முத்தமிடல்
கொடி = காக்கை, ஒழுங்கு, கயிறு, நீளம், வாசனை, துகில், கிழக்குத்திசை, சிறுமை, சிறுபிரிவு, கழுத்தணி கொடி, படர்புல், வரிசை
கொடிக்கால் = வெற்றிலைக் கொடி, வெற்றிலைத் தோட்டம்
கொடிச்சி = குறிஞ்சி நிலப்பெண்
கொடிஞ்சி = தேர், தேரின் முன்னுள்ள அலங்கார உறுப்பு
கொடிநிலை = சூரியன்
கொடிப்புல் = அறுகம்புல்
கொடிறு = குறடு, பூசநாள், கதுப்பு
கொடி வழி = வம்ஸவழி, ஒற்றையடிப்பாதை
கொடுகுதல் = ஊதைக்காற்றால் உடல் உதறுதல்
கொடுகொட்டி = சிவன் கூத்து, ஒருவகைப் பறை
கொடுங்கண் = கொடுமை
கொடுங்காய் = வெள்ளரி
கொடுங்கை = வளைந்தகை, கொழுமை, நீண்டுவளைந்த வீட்டு முன்னிலை
கொடுங்கோளுர் = திருவஞ்சைக் களம்
கொடுநுகம் = மகநாள், கலப்பை
கொடுமரம் = வில், தனுர் ராசி
கொடுமுடி = மலையுச்சி
கொடும்பாடு = கொடுமை, மாறுபாடு
கொடும்பாவி = மழைபெய்ய வேண்டி இழுக்க அமைக்கப்படும் உரு