பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொழுங்குறை

151

கொன்



கொழுங்குறை= பெரிய தசை கொழுநனை= மலரும் பருவத்து அரும்பு கொழுநன் = கணவன்

கொழுந்தன் = கணவன் தம்பி 

கொழுந்தி = மனையாள் தங்கை, தம்பியின் மனைவி கொழுந்து = இளங்கிளை, மருக்கொழுந்து, தீச்சுவாலை கொழுந்துதல் = கருகுதல் சுவாலித்தல் கொழுமுறி = இளந் தளிர் கொழுமை = அழகு, இளமை, நிறம், கொழுப்பு, வளமை கொழும்புகை = வாசனைப் புகை கொளு = கருத்து,பொருத்துவாய் கொளுச்சொல் - கருத்து கொளுத்து = சந்து, மூட்டு கொளுவுதல் = பூட்டுதல், தீ மூட்டுதல், அகப்படுத்துதல், தூண்டிவிடுதல் கொளை = இசைப் பாட்டு, பாட்டு, கோட்பாடு, பயன், தாளம் போடல் கொள்கை = விரதம்,கோட்பாடு பெறுகை, ஒழுக்கம், வாங்குதல், செருக்கு, கற்பு கொள்வோன் = மாணாக்கன் கொள்ளம் = குழை சேறு கொள்ளார் = பகைவர் கொள்ளி = எருமை நாக்கு கொள்ளுப்பாட்டன் = மூன்றாம் பாட்டன் கொள்ளை = கூட்டம்,மிகுதி, சூறையாடல் கொறி =ஆடு கொறுக்கை= உயிர்ப்பு நாணல் கொற்கை வேந்தன் = பாண்டியன் கொற்சேரி = கொல்லன் ஊர் கொற்றத்தேவி = அரசி கொற்றம் = அரசியல், வலி, வெற்றி, வீரம் கொற்றவன்= அரசன் வெற்றியுடையோன் கொற்றவி= அரசி கொற்றவை = உமை, துர்க்கை, வீரலட்சுமி கொற்றன்=கற்சிற்பி கொற்றி = துர்க்கை, பசுவின் இளங்கன்று கொற்றியார் - வைணவப் பெண் துறவிகள் கொற்றுறை = கொல்லன், உலைக்களம் கொன் = அச்சம், காலம், பயன் இன்மை,மிகுதி, பெருமை, விடியற் காலம்