பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157


கௌப்பு 157 சகத்து

கௌப்பு = பெருமை கௌமாரம் = முருகப்பெருமானை வழிபாடு செய்யும் சமயம் கௌமுதீ = நிலவு, திருவிழா கௌமோதகி = விஷ்ணுவின் தண்டயுதம் கௌரம் = வெண்மை, செம்மை, அச்சம், கீர்த்தி, சுத்தம், தாமரை, பொன் கௌரவர் = குருகுல வேந்தர், துரியோதனாதியர் கௌரி = துளசி, பார்வதி, சரஸ்வதி கௌரிசங்கம் = உருத்திராக்க வகை கௌரியன் = பாண்டியர் கௌலாலகம் = மண்பாண்டம் கௌவியம் = பசுவினிடம் உண்டான பால், தயிர், நெய், கோசலம், கோமயம் கௌலேயகன் = நாய் கௌவை = ஒலி, கள், பழிச்சொல், துன்பம், முழக்கம், எள், இளங்காய், ஆயில்யம் கௌளி = தேங்காய் ஓடு பாத்திரம், வெற்றிலைக்கட்டு, பல்லி


ஙனம் = தன்மை, இடம்

சகமனம் = உடன் கட்டை ஏறல் சகசண்டி = முருடன், வெட்கமற்றவன் சகசம் = கூடப்பிறந்தது,இயற்கை சக சாலம் = உலக மாயம் சகச்சிரம் = ஆயிரம் சகடக்கால் = தேர்ச் சக்கரம் சகடம் = வண்டி, தேர், சக்கரம், ஊர்க்குருவி, உரோகினி, வட்டில் சகடை = வண்டி, ஒரு வாத்தியம், உரோகிணி சகதி = சேறு, பொல்லா நிலம் சகத்திரம் = ஆயிரம் சகத்து = உலகம்