பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சச்சாரம்

160

சட்டம்பி



சச்சாரம் = யானைக் கூட்டம்
சச்சிதானந்தம் = சத்தும் சித்தும் ஆனந்தமும் ஆய்நிற்கும் பிரம்மம் சச்சிதானந்தன் = சிவன்
சச்சை = ஆராய்ச்சி, ஓதுதல்
சஞ்சயம் = கூட்டம்
சஞ்சாரம் = உடல், அசைவு
சஞ்சரீகம் = வண்டு
சஞ்சலம் = துக்கம், காற்று, அசைவு
சஞ்சலை = மின்னல், இலக்குமி, திப்பிலி
சஞ்சிதம் = அனுபவித்தது போக மிகுந்துள்ள கருமம், திரட்டியது
சஞ்சீவகரணி = மூர்ச்சையைப்போக்கி உயிர்தரும் மருந்து
சஞ்சீவனி = உயிர்தரும் மருந்து
சஞ்சு = பறவை மூககு
சஞ்சை = சூரியன் மனைவி
சடகம் = ஊர்க்குருவி, கரிக்குருவி, வட்டில்
சடகோபன் = நம்மாழ்வார்
சடக்கரி = ஆறு எழுத்தால் ஆன மந்திரம்
சடக்கு = உடல், செருக்கு
சடங்கம் = சடங்கு
சடங்கவி = வேதாங்கம் ஆறையும் அறிந்தவன்
சடம் = அசித்துப்பொருள், உடல், பொய், கொடுமை, வஞ்சகம், சடவாயு
சடரம் = வயிறு
சடலம் = உடலம்
சடன் = முடன், கீழ்மகன்
சடாக்கம் = முருகனது ஆறு எழுத்தால் ஆன மந்திரம்
சடாடவி = சடைத்திரள்
சடாட்சரி = பார்வதி
சடாதரன் = வீரபத்திரன், சிவன்
சடாய்த்தல் = அதட்டல்
சடானனன் = ஆறுமுகம்
சடிலம் = குதிரை, மிக நெருக்கம், அசைவு, மின்னல்
சடுத்தம் = போட்டி, போராட்டம்
சடை = வேர், விழுது, மயில், வேதபாடபேதம், நெம்பு
சடையன் = சிவன்
சட்சு = கண்
சட்ட = முழுதும், விரைவாக, ஒழுங்காக
சட்டகம் = உடல், வயமக்கள் படுக்கை, பிணம்
சட்டம் = எழுதும் ஓலை, நேர்மை, ஒழுங்கு, நீதிபாடு, சட்டம்
சட்டம்பி = உபாத்தியாயர்