பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162


சதுரப்பாடு


சதுரப்பாடு = சாமர்த்தியம் சதுருபாயம் = சாமபேத தான தண்டமாகிய நான்கு உபாயங்கள் சதுரம் = வல்லமை, விவேகம், சாமர்த்தியம் சதுர் = ஆற்றல், உபாயம் சதுர்த்தம் = நான்காவது சதுர்முகன் = பிரமன், அருகன் சதுர்வேதம் = இருக்கு. யசுர், சாமம், அதர்வணமாகிய நான்கு வேதங்கள் சதைத்தல் = நசுங்குத்ல் சதோடம் = குற்றததுடன் சேர்ந்தது சந்தசமு்த்திரம் = ஏழு கட்ல் 、 சத்தப்பிரமாணம் = ஆகமப்பிரமாணம் சத்தமன் = எல்லோரினும் சிறந்தவன் சத்தமுகில் = ஏழு மேகம் சத்தம் = இலக்கண நூல், ஒலி, வார்த்தை, ஏழு, இசை சத்தம் = ஏழு சத்தன் = அருவுரு உடைய சிவன், வல்லமையுடையோன் சத்தி = சூலம்,பார்வதி, வலி, இடிதாங்கி, கொடி நடும் குழி, வேல், விருதுக் கொடி, சிவனருள்,வாந்தி சந்நிதிபாதம் = சிவசத்தி பதிதல், திருவருள்பற்றுதல் சத்தியயுகம் = கிரேதாயுகம் சத்தியலோகம் = பிரம்மலோகம் சத்தியவதி = வியாசர் தாய் சத்திரம் = யாகம், மடம், அன்ன சாலை, இரண வைத்தியக் கத்தி, கைவிடாப் படை, ஆயுதம், கைவேல், குடை சத்திர வித்தை = இரண சிகிச்சைச் சாத்திரம் சத்து = பிரம்ம்,பெரியோர், நன்மை, உண்மை, அறிவு, அமைதிகுறிக்கும் சொல், சாரம் சத்துவம் = சுபாவம், குணம், சாரம், வலி, சாத்வீக்க் குணம், நன்மைத் தன்மை சத்தை = இருக்கை சநகமுகம் = ஜனக்கூட்டம் சநபதம் = நாடு,ஊர் சந்தசு = வடமொழியாப்பிலக்கண நூல் சந்தடி = கூட்டம், ஒலி சந்தம் = அழகு, சந்தனம், வடிவு, செய்யுள், நிறம், கவியின் வண்ணம் சந்நயம் = சந்தேகம் சந்தர்ப்பணம் = மகிழ் வித்தல்