பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163


சந்தனம் 163 சபாரஞ்சிதம்

சந்தனம் = இரதம், சந்தனம் சந்தனாசலம் = பொதிகைமலை சந்தாபம் = வெப்பம், மன வேதனை சந்தானகுரவர் = சைவ சித்தாந்த ஆசிரியர் நால்வர், மெய்கண்டார், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார் சந்தானம் = சந்ததி, வமிசம், ஐந்தருவில் ஒன்று சந்தி = இணைப்பு, சந்தியா வந்தன நேரம், பல தெருக்கள் கூடும் இடம், பாடை நட்பாக்கல் சந்திபண்ணுதல் = சமாதானம் செய்தல் சந்திரிகம் = மிளகு, மயில் தோகையின் கண் சந்திரகலை = இடப்பக்கநாசி வழியே சுவாசம், சந்திரன் ஒளி சந்திப்பு = ஆறுதெருக்கள் கூடும் இடம், கூடுதல், எதிர்கை சந்திரகாசம் = கத்தி சந்திரகாந்தம் = சந்திரன் ஒளி கண்டு நீரைக்கசியும் கல் சந்திரகி = மயில் சந்திரசாலை = நிலாமுற்றம் சந்திரசூடன் = சிவன் சந்திரசேகரன் = சிவன் சந்திரதிலகம் = சந்தனம் சந்திரமௌலி - சிவன் சந்திரம் = பொன், அழகு, கற்பூரம் சந்திரன் = மதி, குபேரன், இடைகலை சந்திராதபம் = சந்திர கிரகணம் சத்திரிகை = நிலவு சந்திவிக்கிரம் =அடுத்துக் கெடுதல் சந்து = சந்தனம், இடை, பிளவு, தூது, சமாதானம், இசை, சமயம் சந்தை = வேதம், கூட்டம் சந்நத்தம் = சண்டைக்குத் தயாராயிருத்தல் சந்திதி = அருகு, முன் சபம் = மூங்கில், செபம் சபரியை = பூசை சபலம் = அசைவு, நடுக்கம், நிறைவேறல், பயன்படல், நிலையற்ற மனம் சபலை= இலக்குமி,மின்னல் சபாநாதன் = நடராசன் சபாபதி = நடராசன் சபாரஞ்சிதம்= சபைக்கு இதமான தன்மை