பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சபை

164

சமைதல்



சபை = சிதம்பரம், சங்கம்
சப்பாணி = கைதட்டுதல், நடக்க இயலாதவன்
சப்பியம் = ஒழுங்கான பேச்சு
சமகம் = சிவன், வேதமந்திரம்
சமதை = ஒப்பு, பட்சபாதம்
சமத்தானம் = அரச சபை
சமத்காரம் = வியப்பு, அதிசயம், செய்யுள் நயம்
சயம் = போர், நடுவுநிலைமை, முன்படை
சமயக்கணக்கர் = மதவாதிகள்
சமயாதீதன் = சமயங்கடந்த கடவுள்
சமரபுரி = திருப்போருர்
சமரம் = போர், கவரிமா, முள்ளம்பன்றி
சமரி = துர்க்கை
சமர் = போர்
சமவாயம் = சட்டம், கூட்டம், நீக்கமின்றி நிற்றல்
சமவிருஷ்டி = சமமழை
சமழ்த்தல் = நாணுதல், வருந்துதல்
சமழ்ப்பு = நாணம், வருத்தம்
சமழ்மை = இழிவு, பழிப்பு
சமன் = சமம், எமன்
சமஷ்டி = தொகுதி
சமஸ்தம் = எல்லாம்
சமஸ்தானம் = இராச்சியம்
சமாசம் = சமூகம், சபை
சமாப்தி = முடிவு
சமாராதனை = பிராம்மண உணவு, திருப்திசெய்கை
சமி = அருகன், வன்னிமரம்
சமிஞ்ஞை = குறி, பெயர்
சமித்தம் = யாகமண்டபம்
சமித்தல் = பொறுத்தல், அழிதல், சவறுதல்
சமீரணன் = காற்று
சமீரணி = வீமன், அனுமன்
சமீன் = நிலம்
சமுகம் = கூட்டம், இனத்தார், சந்நிதி
சமுசயம் = சந்தேகம்
சமுசாரம் = குடும்பம், இல்வாழ்க்கை, மனைவி, உலகப்பற்று
சமுச்சயம் = கூட்டம், தொகுதி
சமுதாயம் = கூட்டம், ஊர்ப்பொதுச் சொத்து
சமுத்திரயானம் = கடற் பிரயாணம்
சமுத்திரராசன் = வருணன்
சமூகம் = கூட்டம்
சமை = பொறுமை
சமைதல் = அமைதல், பூப்படைதல், ஆயத்தமாதல்