பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சலாவணி

168

சழிதல்


 சலாவணி 168 சுழிதல்

சலாவணி = எங்கும் வழங்குகை சலிகை = பெருமை, செல்வாக்கு சலித்தல் = வெறுத்தல், அசைதல், சோர்தல் சலியாமை = அசைவின்மை, இளையாமை சலீலம் = நீர் சல்லகி = ஆத்திமரம் சல்லபம் = முள்ளம்பன்றி சல்லரி = பம்பை, மேளம் சல்லாபம் = கூடிப்பேசல் சல்லியம் = அம்பு, சச்சரவு, முட்பன்றி, ஆப்பு, கடன், உபத்திரவம், எலும்பு, இருப்புக்கோள் சவங்குதல் = மெலிதல், வற்றுதல் சவடன் = பயனற்றவன் சவடி = காதணி, கழுத்தணிவகைகள் சவடு = உவர்மண், வண்டல் சவட்டுதல் = வளைவாக்குதல், மெல்லுதல், அழித்தல், வருந்துதல், கொல்லுதல், மிதித்தல் சவணம் = கேட்டல் சவம் = பிசாசு, பிணம்,மூங்கில், சவரம் = ஒருபொன் காசு,சாமரம் சவரன் = வேடன் சவரி = சாமரம், கவரிமான் சவர் = உவர், இழிவு சவலை = தாய்பால் இல்லா மெலிவு, மனக்குழப்பம், உறுதி அற்றது, இளமை மின்னல் சவளம் = குந்தம், சிரவணம் சவனம் = வேகம் சவி = அழகு, ஒளி, மணிவடம், செம்மை சவிதா = சூரியன் சவித்தாரம் = விரிவு சவுரம் = சூரிய சம்பந்தமுடையது சவுரி = இயமன், திருமால், திருடன் சவுரியம் = சூரத்தனம், களவு சவை = அம்பலம், கூட்டம், புலவர் சங்கம் சவ்வியசாசி = அருச்சுனன் சவ்வியம் = தெற்கு, இடப்பக்கம் சழக்கன் = நீதிக்கு வேறானவன் சழக்கு = குற்றம், பொய், தளர்ச்சி, பயனின்மை, அநீதி, தீமை சழங்குதல் = அசைதல், நழுவுதல், சோர்தல் சழிதல் = நெருங்கிக்கிடத்தல்