பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாகினி

170

சாதித்தல்



சாகினி = வெள்ளாடு, சிறுகீரை
சாகை = சாதல், தங்குமிடம், பிரிவு, மரக்கொம்பு, வேத நூற்பிரிவு, வட்டில்
சாக்காடு = சாவு
சாக்கியர் = புத்தர், சாக்கிய நாயனார்
சாக்கிரதை = விழிப்பு
சாக்குருவி = ஆந்தை
சாக்கை = அரசரது கருமத்தலைவன், நிமித்திகன்
சாக்கையன் = கூத்தாடும் சாதியான்
சாக்தேயர் = சக்தியை வழிபடுபவர்
சாங்கியம் = கபிலர்மதம், கிரியை
சாங்கோபாங்கம் = முழுமை, ஒன்றும் விடாமை
சாசனம் = உறுதிப்பத்திரம், ஆக்ஞை, தானபத்திரம்,வெண்கடுகு சாசுவதம் = அசையா நிலை, மோட்சம், நித்தியம்
சாடராக்கினி = வயிற்றுத் தீ
சாடி = சிலை, தாழி, புறங்கூறல்
சாடு = வண்டி, கைத்தலத்தில் இடும் உரை
சாட்சத்து = கண்கூடாக
சாட்சிபூதம் = சாட்சியாய் இருத்தல்
சாட்டாங்கம் = இருகை, இடு பாதம், இரு செவி, தலை, மார்பு ஆகிய எட்டு உறுப்புக்கள் நிலத்தில் படிய வணங்கும் வணக்கம்
சாட்டியம் = பொல்லாங்கு, வஞ்சகம், அசிர்ணம்
சாட்டை = கயிறு, கசை
சாணம் = தழும்பு, சந்தனக் கல், சாணி
சாதகப்புள் = வானம்பாடி
சாதகம் = பிறப்பு, பயிற்சி, வானம்பாடி, பூதம், பேய், பிறவிக்குணம், பழக்கம்
சாதம் = உண்மை, கூட்டம், சோறு, இளமை, பிறப்பு, சுகம்
சாதவேதா = நெருப்பு
சாதனசாத்தியம் = காரண காரியம்
சாதனம் = சாசனம், கருவி, பத்திரம், முயற்சி, சித்தி, பயிற்சி, திரவியம், முடிப்பது
சாதரூபம் = பொன்
சாதனை = பயிற்சி
சாதன்மியம் = ஒப்புமை
சாதாரி = முல்லை நிலப்பண்
சாதி = கள், தேக்கு, மரம், பிரம்பு, சிறுசண்பகம்
சாதித்தல் = கொல்லுதல், பழகல் அழுத்தல், வெல்லுதல்