பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171


சாது = அழகு, சாந்தம், துறவி , தயிர் சாது சங்கம் = நல்லோர் கூட்டம் சதுரங்கம் = இரத, கஜ, துரக பாதாதியாகிய நால்வகைச் சேனைகள் சாதுரியம் = நாகரிகம் சாதுரிசியம்=ஒப்புமை சாதுவன் = அருகன் சாத்தவர் = குதிரை வீரர் சாத்தன் = ஐயன் சாத்தம் = சப்தப்பிரமாணம் சாத்தல் = வேதம் சாத்தியம் = அனுகூலம் சாத்தன் = அருகன், வாணிகர் கூட்டத்தலைவன், சாத்தனார் சாஸ்திரம் = ஒழுங்கு, விதி, கலை சாத்தினர் = குதிரை வீரர் சாத்து = அடி, அணிதல், அப்புதல், குதிரைச்சேவகன், வாணிகம் செய்வோர் கூட்டம் சாத்மீகம் = சாந்தகுணம் சாநவி = கங்கை கதி சாது = முழந்தாள் சாந்தம் = சந்தனம், பொறுமை, தயை சாந்தனையும் = சாகும்வரையிலும் சாந்தாற்றி = விசிறி சாந்தி = பூசை, கழிப்பு, ஓமம் சாந்திரமானம் = சந்திரனைக் கொண்டு அளவிடுதல் சாந்திராயணம் = வளர்பிறையில் ஒவ்வொரு பிடி அன்னம் கூட்டி உண்டுவந்து, அவ்வாறே தேய்பிறை வரும்காலத்து ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்து உண்டு அனுட்டிக்கும் ஒருவகை விரதம் சாந்து = சந்தனம் சாந்தை - பூமி சாந்நித்தியம் = சமீபம் சாபம் = குட்டி,வில், சபித்தல் சாபல்யம் = அனுகூலம், பேறு சாப்பை = புல்பாய் சாமக்கிரியை = உபகரணம், உணவுப்பண்டம் சாமந்தர் = படைத் தலைவர், சிற்றரசர், மந்திரிகள் சாமம் = பாதி இரவு, ஏழரை நாழிகை, சமாதானம், ஒர் உபாயம், சாமவேதம், கருமை, பச்சை, பஞ்சம், அறுகு சாமரம் = போர், கவரி, கழு சாமளம் = பச்சை, கருமை சாமளி = பார்வதி, காளி சாமன் = காமன் தம்பி