பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172


சாமானியம் = பொது சாமி= கந்தன், கடவுள், தலைவி, பொன், செல்வம் சாமியம் = ஒப்புமை சாமிகரம் = பொன் சாமீபம் = கடவுள் அருகில் இருக்கும் பேறு சாமுசித்தன் = முற்பிறப்பில் சரியை,கிரியை, யோகம், மார்க்கங்களை முடித்து ஞானத்தோடு பிறந்தவன் சாமுண்டி= காளி, துர்க்கை சாமுத்திரிகம் = உடல் உறுப்பின் இலக்கண நூல் சாம்பல் = பழம்பூ , சாம்புதல், நாவல், முதுமை சாம்பவி = பார்வதி சாம்பன் = அம்மையப்பன் சாம்பான் = சிவ திட்சை பெற்ற பெற்றான்சாம்பான் என்னும் பெயரிய பறையர் குலத்தவன் சாம்பிராச்சியம் = பெருஞ்செல்வம், சக்கரவர்த்தி, தன்மை சாம்பு = பறை, படுக்கை, புடவை, பொன், நாவல் சாம்புதல் = ஒடுங்குதல், கூம்புதல், உணர்வழிதல், சோர்தல், இழுத்தல், வாடுதல், கெடுதல் சாம்புநதம் = ஒரு வகைப் பொன் சாயகம் = அம்பு, வாள் சகயம் = அம்பு, அந்திப்பொழுது சாயல் = அழகு, ஒப்பு, காய்தல், நிழல், நிறம், நுண்மை, மிருது, மென்மை, மேன்மை, இளைப்பு, துயிலிடம், மேனி, சார்பு, இணைப்பு சாயாதேவி = சூரியன் மனைவி சாயாநதம் = ஓந்தி சாயுச்சியம் = இறைவனோடு இரண்டறக் கலத்தல், மோட்சம் சாயை = மனைவி, நிறம், புகழ் , நிழல், ஒப்பு சாய் = கோரை, புகழ், நிறம் சாய்தல் = மெலிதல்,அசைதல், அழிதல், தோற்றோடல், கவிழ்தல், தளர்தல், வருந்துதல் சாரகம் = தேன் சாரங்கம் = சாதகப்பறவை, தாமரை, மயில், வண்டு, மான், விஷ்ணுவில் சாரசம் = குருகு, தாமரை, வெண்ணாரை சாரணர் = ஒற்றர், தூதுவர், சமணமுனிவர் சாரதம் = பூதம் சாரதா = சரஸ்வதி