பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சால்

174

சிதை





சால் = மிகுதி, அமைதி
சால்பு= அமைதி, நிறைவு, குணம், மாட்சிமை
சாவகம் = ஒரு தீவு, மாணாக்க நிலை, நோன்பு
சாவகர் = சமணர்
சாவதானம் = கவனம்
சாவி = பதர், திறவு கோல்
சாவித்திரி = சத்தியவான் மனைவி, பிரமன் மனைவி, பார்வதி
சாழல் = மகளிர் விளையாட்டு
சாளிகம் = வண்டு
சாளிகை = பணப்பை
சாறு = கொத்து, திருவிழா, கள், மிளகு, ரசம், பூசை, திருமணம்
சாறுதல் = வழுக்கல், சரிதல்
சாற்றமுது = மிளகு ரசம்
சாற்றுதல் = சொல்லுதல், விற்றல், நிறைத்தல், அடிததல், உணர்த்தல்
சானவி = கங்கை
சான்றவர் = அறிந்தவர்
சான்றாண்மை = பொறுமை, ஞானம், சால்புடைமை
சான்று = சாட்சி
சான்றோன் = அறிஞன்
சி
சிகண்டம் = தலைமுடி, மயில் தோகை
சிகண்டி = ஒருபண், விஷ்ணு, அலி, மயில், ஒருமுனிவர்
சிகண்டிசன் = வியாழன்
சிகதை = மணற் குன்று, வெண்மணல்
சிகரம் = மலை, மரத்தின் நுனி, அந்தம், வட்டில், அலை, காக்கை, கோபுரம், உயர்ச்சி
சிகரி = எலி, கருநாரை, கோபுரம், மரம், மலை
சிகல் = தொழில்
சிகழி = குடுமி
சிகழிகை = மயிர்முடி, மாலை, கொண்டை
சிகாமணி = தலையாபரணம், சிறந்தோன்
சிகாவலம் = மயிர், பாசி
சிகி = மயில், தீ, கேது, மரம், மலை, ஆமணக்கு
சிகிச்சை = வைத்தியம், பலகாரம்
சிகித்துவசன் = மயிற்கொடியோன், முருகன்
சிகுவை = நா, வாக்கு
சிகை = குடுமி, கொண்டை, பந்தம், தலை, மலைமுடி, கவனம், அக்கினிச்சுவாலை