பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

179



சிவிகை = பல்லக்கு சிவிறி = விசிறி சிவை = உலைமூக்கு, உலைத்துருத்தி, பார்வதி, நரி, வேர் சிவோகம்பாவனை = நான் சிவன் எனப்பாவித்தல் சில்வீடு = சில்வண்டு, சுவர்க்கோழி சிறகு = பக்கம், இறகு சிறக்கணித்தல் = சுருக்குதல், கடைக்கண்பார்வை சிறங்கை= கைநிறை அளவு சிறத்தல் = மிகுதல் சிறப்பு = திருவிழா, செல்வம், தலைமை, மிகுதி, நைமித்திக உற்சவம் சிறார் = சிறுவர் சிறுகாலை = விடியற்பொழுது, சிறுவயது சிறுகால் = தென்றல் சிறுச்சொல் = பழிச்சொல் சிறுதிகை = கோண திசை சிறுநனி = சிறிதுபொழுது, விரைவாக சிறுநீர் = மூத்திரம் சிறுபட்டி = கட்டுக்கடங்காச் சிறுவன் சிறுபதம் = வழி, தண்ணீருணவு சிறுபுறம் = பிடறி, முதுகு, சிறுகொடை சிறுப்பம் = சிறுபிராயம் சிறுமை = தரித்திரம், நோய், குற்றம், துன்பம், எளிமை, மிக்ககாமம், அற்பம், இளமை சிறுவரை = அற்பகாலம் சிறுவிதி = தட்சன் சிறு விலை = பஞ்சம் சிறை = மதில், பக்கம், நீர்க்கரை, துடை, காவல், இறகு, அடிமை, இடம், சிறைச்சாலை, அறை, அணை சிறைக்கணித்தல் = கடைக்கணித்தல், புறக்கணித்தல் சிறைதல் = நிறம்கெடுதல் சிறைத்தல் = நீரைத்தடுத்தல் சிறைப்புறம் = காவல், மலைப்புறம், ஒதுக்கிடம், வேலிப்புறம் சிற்குணன் = கடவுள் சிற்சபை = சிதம்பர நடன சபை, ஞானசபை சிற்பம் = சிந்தித்தல், அற்பம், நுண் தொழில் சிற்பரம் = பரப்பிரம்மம் சிற்பரன் = கடவுள், அறிவுக்கு அப்பாற்பட்டவன் சிற்பறை = பராசத்தி சிற்றம்பலம் = சிதம்பரம், ஞானசபை சிற்றவை = சிறிய தாய்