பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிற்றில்

180

சீமை



சிற்றில் = குடிசை, மணல் வீடு
சிற்றினம் = ஆகாதகூட்டம் திரை
சினகரம் = சைனர்கோவில், சிறு கோவில்
சினகர் = சைனர்
சினம் = கோபம், நெருப்பு, வெயில், வெம்மை, போர்
சிவன் = அருகன், புத்தன்
சினை = உறுப்பு, பூவரும்பு, முட்டை, கர்ப்பம், மரக்கிளை
சினைத்தல் = பருத்தல், எழுதல், தோன்றுதல்
சின்மயம் = ஞானமயம்
சின்முத்திரை = ஞானமுத்திரை
சின்மொழி = இழிசொல்
சின்னப்பூ = விடுபூ, அடையாளப் பூ
சின்னம் = முறம், துண்டு, பொடி, காளம்
சின்னூல் = குணவீரபண்டிதர் எழுதிய நேமிநாதம் என்னும் ஓர் இலக்கண நூல்
சினவு = பயிற்சி, ஒழுங்கு

சீ


சீ = இகழ்ச்சிக்குறிப்பு, சீழ், இலக்குமி, காந்தி, சிறப்பு, சம்பத்து, ஒளி
சீகண்டன் = சிவன்
சீகரம் = கவரி, கடல் அலை, மழை, துளி, செல்வவளம்
சீக்கை = கோழை
சீசம் = ஈயம்
சீட்டி = ஊதுகுழல், சீழ்க்கை
சீதகரணன் = சந்திரன்
சீதம் = குளிர், நீர், பனி, மேகம், ஒரு நாடு, கள், சந்தனம்
சீதரன் = விஷ்ணு
சீதளம் = தாமரை, முத்து, சந்தனம், குளிர்
சீது = கள்
சீதேவி = இலக்குமி
சீதை = இராமன் மனைவி, பொன்னாங்கண்ணி, உழு படைச்சால், தேன்
சீந்தல் = கோபித்தல், மதித்தல், விரும்பல்
சீபதி = அருகன், விஷ்ணு
சீமான் = குபேரன், அருகன், விஷ்ணு, செல்வன்
சீமுதம் = மேகம், மழை
சீமை = எல்லை, கரை, வயல், தேசம்