பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரம்

16

அரிணை




அரம் = குகை, பாதலம், வாளரம்
அரம்பு = குறும்பு, தீங்கு
அரம்பை = தெய்வப்பெண், வாழை, ஒமம்
அரயன் = அரசன்
அரலை = குற்றம், விதை, பரல் கற்கள்
அரவகிரி = வேங்கடமலை
அரவப்பகை = கருடன்
அரவம் = சிலம்பு, ஒலி, பாம்பு, ஆயில்யம்
அரவன் = சிவன்
அரவிந்தம் = தாமரை
அரவிந்தை = இலக்குமி
அரவு = பாம்பு, நாக மரம்
அரவோன் = பதஞ்சலி முனிவர்
அரறுவ = முழங்குவ
அரற்றுதல் = அழுதல், ஒலித்தல், அலறுதல்
அரன் = சிவன்
அரன் வெற்பு = கயிலாயம்
அரன் தோழன் = குபேரன்
அராகம் = ஆசை, பாலையாழ்த் திறம், அடங்காமை, அவரவின்மை, சிவப்பு, பொன்
அராதி = பகைவன்
அராந்தாணம் = சமணர் கோயில்
அராபதம் = வண்டு
அராமம் = சோலை, பைங்கூழ்
அரி = அரிசி, அழகு, அரிதல், பன்றி, மூங்கில், வண்டு, கடல், தகடு, சோலை, தேர், உள்ளிடுமணி, நெற் கதிர், யாழின் நரம்பு, செவ்வரி, கண்வரி, வாயு, பகை, பகைவர், விஷ்ணு, இந்திரன், அக்கினி, யமன், சூரியன், சிங்கம், குதிரை, குரங்கு, கிளி, மயில், தவளை, மரகதம், கூர்மை, குறைவு, பனங்கருக்கு, ஈர்வாள், மென்மை, கண், சிவன், ஒளி, இரேகை, குற்றம், சக்கரம, பாம்பு, நெருக்கம், வலி, கடல், காற்று, உவமை, சந்திரன், சோலை, நிறம், பொன், மலை, மாலை, பரல்கல், பறை, கட்டில், செம்மறியாடு, படுக்கை, விதை
அரிகரபுத்திரன் = ஐயனார்
அரிகூடம் = கோபுர வாயில்
அரிசனம் = மஞ்சள்
அரிட்டம = காக்கை, பிரசவிக்கும் வீடு, மோர், கள், மரணக்குறி, முட்டை
அரிணம் = சிவப்பு, மான், பொன், யானை
அரிணன் = சிவன், விஷ்ணு, சூரியன்
அரிணி = மான் ஜாதிப் பெண்
அரிணை = கள்