பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187


சூகம் = ஊர்வன, தாமரை, நெல்வால் சூகரம் = பன்றி, ஒருவகை மான் சூகை = யானை, எறும்புகளில் ஒருவகை சூக்குமசரீரம் = நுண்ணிய வடிவான உட்சரீரம் சூக்கம் = கூர்மை, நுண்மை சூக்குமம் = அணு, அற்பம், வஞ்சகம் சூக்தம் = நன்கு உரைக்கப் பட்டது, வேதப் பகுதி, ஆன்றோர் மொழி சூசகம் = தருப்பை, உளவு, அறிகுறி சூசனம் = அறிவிப்பு, அபிநயம், குறிப்பு, கூர்மை சூசி = ஊசி, குறிப்பு, அட்டவணை, துளை சூசிப்பித்தல் = சுருங்கச் சொல்லல் சூசுகம் = முலைக்கண் சூடகம் = கைவளை சூடம் = தலை, சிவன்சடை, உச்சிச்சடை சூடன் = கற்பூரம், மீன் சூடாமணி = முடிமணி,தேவமணி சூடி = புடவை சூடிகை = முடி, ஸ்தூபி சூடு = அரிக்கட்டு கோழிக்கொண்டை, இறைச்சி, வடு, குடுமி, சுடுதல், நெல்லரிக்குவியல், சூடுதல் சூடை= குடுமி, கைக்கடகம், தலை சூட்சம் = சுருக்கம்,தந்திரம், சூத்திரம் சூட்சுமம் = நுண்மை, கூரறிவு சூட்டிகை = கூரியபுத்தி சூட்டு = நுதல் அணி, போர்ப்பூ, முடிப்பு, கூர்மை, சக்கரவிளிம்பு, பாம்பின் படம், மயிலின் உச்சிக் கொண்டை, ஏவறை சூதகம் = மாமரம், தீட்டு, பழமை, முலைக்கண் சூதசாலை = மடப்பள்ளி சூதம் = வண்டு, பாவம், பிறப்பு, மாமரம், மடைத்தொழில், சூது சூதர் = பாணர், புகழ்வோர் சூதனம் = அழித்தல், அங்கீகாரம் சூதன் = பாணன், தச்சன், புகழ்வோன், சூரியன்,வஞ்சகன், சமையற்காரன், தேர்ப்பாகன்