பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189


சூழ்ச்சித்துணைவர் 189 செங்குவளை

சூழ்ச்சித்துணைவர்= மந்திரிமார் சூழ்நதோர் = உறவினர் சூழ்வு = பக்கம், ஆராய்வு சூளறவு = சபதம், சத்தியம் செய்தல் சூளாமணி = முடிமணி, ஒர் இலக்கியநூல் குளிகை=யானைக்காதின் அடி ,செய்குன்று, வீட்டினுச்சி, நிலாமுற்றம், நீர்க்கரை சூளுறவு = ஆணையிடுதல் சூளை=வேசி,செங்கற்சூளை, காளவாய் சூள் = ஆணை, சபதம் சூறாவளி = சுழல்காற்று சூறாவரி = சுழல்காற்று சூறுதல் = சூழ்தல் சூறை = கொள்ளை, மயிர்முடி, சல்லடம், சுழல்காற்று சூறையர்= பரத்தையர் சூனர்= மாமிசம் விற்பவர் சூனியம் = ஆகாயம், இன்மை, பாழ், குறைவு, மரணவித்தை சூனு= மகன் சூன் = மாமிசம், குற்றம், வளைவு, கபடம், பெருவயிறு சூன்முகில் = கருமேகம் சூன்றல் = தோண்டல் சூன்றிடல்= குடைதல்

செகநாதன் = கடவுள் செகம் = உலகம் செகில் = தோள், தோள் மேலிடம், சிவப்பு செகிள் = பழத்தோல் செகுத்தல் = அழித்தல், வெல்லுதல் செக்கணி = ஒரு கூத்து செக்கம் = கோபம், மரணம், சிவப்பு செக்கு= சதய நட்சத்திரம் செங்கண்மா = கரடி செங்கல்வரை = திருத்தணிகை மலை செங்கழுநீர் = செங்குவளை மலர் செங்களி =செம்பஞ்சுக் குழம்பு செங்குவளை = ஒருவகை மலர்