பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190


செங்கீரை190
செங்கீரை = பிள்ளைத்தமிழ் நூற்களில் வரும் ஒருபருவம், செம்மையான மொழிகளைப் பேசுமாறு தாதியர் குழந்தையை வேண்டல், (அல்லது) இருகைகளை நிலத்தில் ஊன்றியும் ஒரு முழந்தாளையும் ஊன்றியும் ஒரு தாளைப் பின் நீட்டியும் தலை தூக்கி ஆடுமாறு தோழியர் குழந்தையை வேண்டல்
செங்கை = ஆதிரைநாள் , கொடைகொடுக்கும் கை
செங்கோல் = நல்லரசுபொன்
செங்கோற்கடவுள் = இயமன்
செச்சை = சந்தனக்குழம்பு, நீறு, இலைவீடு, சிவப்பு, சட்டை, வெள்ளாடு
செஞ்சடையோன் = சிவன்
செஞ்சம் = நேர்மை, முழுமை
செஞ்சாலி = செந்நெல்
செஞ்சுடர் = சூரியன், அக்கினி
செஞ்சொல் = வெளிப்படைச்சொல், நல்லமொழி
செஞ்சோற்றுக்கடன் = உண்டதற்குத் திருப்பிச்செய்யும் உதவி
செடி = ஒளி, குற்றம், பாவம், புதர், தீமை, துன்பம், பூண்டு, தீய வாசனை, நெருக்கம், இழிவு
செந்தளிர்ப்பு
செட்டி = முருகன், வைசியன்
செட்டு = சிக்கனம் வாணிபம்
செட்டை = இறகு, தோள்பட்டை
செண்டு = சவுக்கு, குதிரை வட்டமாக ஒட அமைந்த வெளி, கூர்மை, பந்து, பூஞ்செண்டு, வையாளிவீதி
செண்டை = ஒருவாத்தியம்
செண்ணம் = பூத்தொழில், அழகிய வடிவு, நுட்பவேலை
செண்ணுதல் = அலங்கரித்தல்
செதுகு = சருகு, தீங்கு, கூளம்,
செதுகுதல் = தவறுதல்
செதுகை = தீமை
செதுக்கு = வாடல், சேறு, பூதம், பெண்குரங்கு
செதுத்தல் = சோர்தல் ,ஒளிமழுங்கல்
செதுமொழி = பொல்லாச்சொல்
செதும்பல் = சேற்றுநிலம், சின்னீர்
செதும்பு = சேறு, கணுக்கால் அளவு நீரோட்டம்
செத்துதல் = ஒத்தல், கருதுதல், செதுக்குதல்
செந்தளிர்ப்பு = மகிழ்ச்சி, செழிப்பு