பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செல்வம்

193

சென்னை





செல்வம் = இன்பம், அழகு, பொருள், சீர், சுவர்க்கம், கல்வி, செழிப்பு
செல்வன் = மகன், அரசன், கடவுள்
செவி = ஓர் அங்குல மழை, கேட்கை
செவிடு = ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு செவிப்புலன் = கேள்வி
செவிமடுத்தல் = கேட்டல்
செவிமறை = காதில் மறுவுள்ள எருது
செவியறிவுறுஉ, செவியுறை = உபதேசம் செய்தல்
செவியன் = முயல்
செவிலி = வளர்ப்புத் தாய், தமக்கை
செவ்வல் = செம்மண் நிலம்
செவ்வழி = நெய்தல் நிலப்பண், நல்வழி
செவ்வனம் = நேரே
செவ்வனிறை = நேரான பதில்
செவ்வி = ஏற்ற சமயம், அழகு, தகுதி, காட்சி, புதுமை, பருவம்
செவ்வு = திசை, நேர்மை, செம்மை
செவ்வை = நேர்மை, மிகுதி
செழிதல் = வளர்தல்
செழியன் = பாண்டியன்
செழுந்து = செழிப்பு
செறல் = கொல்லல்
செறிவு = அடக்கம், நெருக்கம், மிகுதி, அடங்குதல்
செறிப்பு = அடக்கம்
செறு = வயல், பாத்தி, குளம்
செறுதல் = அழித்தல், கொல்லல், வெல்லுதல், தடுத்தல், கோபித்தல், பகைத்தல்
செறுத்தல் = கோபித்தல், அடக்குதல், தடுத்தல், வெறுத்தல்
செறுநர் = பகைவர்
செறுமுதல் = களைத்தல், தேம்பியழுதல்
செறும்பு = பெருங்கோபம்
செற்றம் = கோபம்
செற்றலர் = பகைவர்
செற்றல் = கொல்லல், கேடு, வெறுத்தல், கேடுத்தல்
செற்றார் = பகைவர்
செற்றுதல் = நெருங்குதல், கொல்லுதல், பின்னுதல், பதித்தல்
செற்றை = நன்னீர் மீன், கூட்டம்
செனகன் = தந்தை, சீதையின் பிதா
சென்னி = தாய்
சென்மசாபல்யம் = பிறவி எடுத்தபலன்
சென்மபத்திரிகை = சாதகம்
சென்னம் = ஒரு பறவை
சென்னி = சோழன், தலை, பாணன்
சென்னை = சென்னைபுரி, கன்னம்