பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சை

196


சை = கைப்பொருள்
சைகதம் = மணல்,மணல் காடு
சைங்கிகேயன் = இராகு
சைசவம் = இளமை
சைதனம் = ஆத்மா
சைதன்னியம் = அறிவு
, ஆத்மா , கடவுள் தத்துவ ஞானம்
சைத்தியம் = குளிர்மை,புதுக்கோயில், புத்தன் ஆலயம்
சைத்தியன்= சுக்கிரன்
சைத்திரம் = சித்திரவேலை, சித்திரைமாதம்,
சைத்திரதம்= குபேரனதுவனம்
சைந்தவம் = குதிரை, சிந்து நதி
சையம் = குடகுமலை, கல்செல்வம், நியமம்
சையோகம் = புணர்ச்சி, கலப்பு, கூட்டம்
சைலம் = மலை,சேலை
சைவ சாத்திரம் = சிவாகமம், சைவசித்தாந்த சாத்திரம்
சைவசித்தாந்தம் = சைவ ஆகம முடிவாகிய மதம், சைவ சமயத்தின் முடிந்த முடிவு இன்னது எனக் கூறும் சமயக் கொள்கை
சைவலம் = பாசி, தாமரைத்தண்டு
சைவம் = இளமை, சிவ மதம்
சைனன் = அருகன்
சொ சொகினம் = சகுனம்
சொக்கம் = அழகு, துய்மை, சுவர்க்கம்
சொக்கன்= சிவன், பொன்னுடையோன், அழகன்
சொக்கு = அழகு, பொன், மயக்கு
சொங்கு = குற்றம்
சொச்சம் = குற்றமின்மை, மிச்சம், குறை
சொடக்கு= கைந்நொடிப்பொழுது, சோம்பல்தன்மை
சொட்டுதல் = வஞ்சித்தல், அபகரித்தல், துளித்தல், கொத்துதல்
சொட்டை = குழிவு, வளைதடி, பள்ளம்