பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரிதம்

17

அருத்தாபத்தி




அரிதம் = பொன்னிறம், திசை
அரித்தவிசு = சிங்காதனம்
அரித்திரம் = மஞ்சள்
அரிந்தமன் = விஷ்ணு
அரிப்பு = கோபம், தினவு, குற்றம்
அரிமணி = மரகதம்
அரிமந்திரம் = சிங்கக் குகை
அரிமாநோக்கம் = சிங்கப்பார்வை (அதாவது முன்பின் பார்த்தல்)
அரியம் = வாச்சியம்
அரியணை = சிங்காதனம்
அரியமா = சூரியன்
அரியல் = கள், அரிதல், தேன்
அரில் = குற்றம், பகை, பின்னுதல், மூங்கில், பிணக்கு, புதர்கள் அடர்ந்த காடு
அரிவை = பதினெட்டு வயதுக்கு மேல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட பெண்
அருகந்தர் = அருக சமயத்தோர்
அருகம் = சமண மதம்
அருகல் = இறத்தல், குறைதல், அஞ்சல், கெடுதல்
அருக்கம் = எருக்கு, சூரியன், பொன், அருமை, நீர்க் காக்கை, குறைவு
அருக்கன் = சூரியன், சுக்கு
அருக்கியம் = மந்திர நீர் இறைத்தல்
அருங்கலம் = பெறுதற்கரிய ஆபரணம்
அருங்கலச் செப்பு = நகைப்பெட்டி, ஒரு சைன நூல்
அருங்கேடு = கேடு இன்மை
அருச்சி = பூசை
அருச்சுனம் = வெண்மை, மருத மரம், பொன், எருக்க மரம்
அருஞ்சிறை = நரகம்
அருட்குறி = சிவலிங்கம்
அருணமணி = மாணிக்கம்
அருணம் = ஆடு, எலுமிச்சை, சிவப்பு, மான்
அருணவம் = கடல்
அருணன் = சூரியன், புதன், சூரியன் தேர்ப்பாகன்
அருணாசலம் = திருவண்ணாமலை
அருத்தம் = பாதி, சொற்பொருள், பொன், பொருள்
அருத்தாபத்தி = சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெறுதல்