பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொண்டு

197

சோசித்தல்


சொண்டு = செருக்கு, பறவை, மூக்கு, குற்றம், உதடு
சொம் = உடைமை
சொரிதல் = சுழலல், பொழிதல்,உதிர்தல்
சொருபஞானம் = பரமஞானம்
சொருபம் = அழகு, உடம்பு, சாயல், வடிவு, பரம்
சொா்ணம் = பொன்
சொலவு = சொல்லுதல்,பழமொழி
சொலி = மரப்பட்டை
சொலித்தல் = ஒளிர்தல், எரிதல், உரித்தல், போர்த்தல்
சொல் = நெல், புகழ், மொழி, வாக்கியம், சரஸ்வதி
சொல்லானந்தம் = சொற் குற்றம்
சொல்லெச்சம் = சொல்குறைந்து நிற்பது
சொல்லேருழவர் = புலவர், மந்திரிகள்
சொல்வளம் = சொல்நயம்,சொல் சாமர்த்தியம்
சொல் விளம்பி = கள்
சொற்செலவு = செல்வாக்கு, பரிந்துபேசுதல்
சொற் புள் = காகம்
சொற்றல் = சொல்லல்
சொன்றி = சோறு, சுக்கு
சொன்னகாரர் = தட்டார்
சொன்மாலை = புகழ்மாலை
சொன்னம் = பொன்
சொன்னல் = சோளம்

சோ

சோ = வாணாசூரன் நகர், மதில், அரண்
சோகம் = சோம்பல், திரட்சி, அசோகு, ஒட்டகம், அது நான் அவன் நான் என்னும் தத்துவம் சோகம்பாவனை = பரம்பொருள் நான் என்று பாவித்தல் சோகாத்தல்=துன்பமுறல்
சோகாப்பு = துயரம் சோகாப்பு = துயரம்
சோகி = பலகறை,பிடாரன்
சோகு = பிசாசு
சோங்கு = மறத்தல்,மலைச் சோலை, மரக்கலம், நாரை
சோசித்தல் = சோர்வடைதல், துக்கப்படல், வற்றுதல்