பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தடையம்

204

தண்டு


தடையம் = கத்திப்பிடி
தட்சணம் = உடனே
தட்சிணம் = தெற்கு,வலப்பக்கம்
தட்சிணாலம் = பொதிகைமலை
தட்சிணாயனம் = சூரியன் தென் திசைப்பக்கம் பயணம் செய்யும் வீதி
தட்டம் = உண்கலம், பல், பெரும்பூ, கச்சு, பாம்புப் பல், தூங்குமிடம், நீர் நிலை
தட்டான் = கிழக்குரங்கு தட்டான்
தட்டி = காவல், கேடகம், கதவு, வெற்றிலைக்கட்டு, அரைச்சல்லடம்
தட்டு = குற்றம், தந்திரம், தோ்நடு, முறம், வட்டம், தீங்கு
தட்டுளுப்பு = தடுமாற்றம்
தட்டை = கிளியோட்டும் கருவி, அரிதாள், தினைத்தாள், மூங்கில், கரடிகைப்பறை
தட்பம் =குளிர்ச்சி, அன்பு
தணக்கு = நுணா, வால்
தணத்தல் = நீங்கல், பிரிதல், போதல்
தணிக்கை = மேல்போர்வை
தணிகை = திருத்தணிகை
தணியல் = கள்
தணிவு = கீழ்மை, குறைவு
தண் = குளிர், நீா், அருள்
தண்டகம் = முதுகெலும்பு, தண்டகாரண்யம்
தண்கதிர் & தண்சுடா்= சந்திரன்
தண்டதரன் = அரசன்,யமன்
தண்டநாயகன் = நந்திகேஸ்வரன், சேனாதிபதி
தண்டபாணி = பழனியாண்டவன், யமன்
தண்டமிழ் = இனிய தமிழ்
தண்டம் = குதிரை, உடம்பு, படை, யானை செல்வழி, வணக்கம், நஷ்டம், வளைதடி, ஊன்றுகோல்
தண்டயம் = பல்லக்குத்தண்டு
தண்டலர் = பகைவர்
தண்டலை = சோலை,தோட்டம்
தண்டல் = அமைதல், தணிதல், நீங்கல்
தண்டவாளம் = உருக்கு இரும்பு
தண்டாமை = நீங்காமை
தண்டி = சண்டேசுர நாயனார், வானப் பிரஸ்தன், நிறைவு
தண்டிகை = பல்லக்கு
தண்டியம் = தண்டு
தண்டு = ஓணான், பல்லக்கு, தாள்,சேனை, தடி, வீணை, கதை