பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருத்தி

18

அலகிடுதல்


அருத்தி = செல்வன், ஆசை, கூத்து
அருத்தித்தல் = வேண்டுதல்
அருத்துதல் = உண்பித்தல்
அருத்தேந்து = பாதிச் சந்திரன்
அருந்ததி காட்டல் = வசிஷ்டரைக் குறிக்கும் நட்சத்திரத்தின் பின் செல்லும் நட்சத்திரமான அருந்ததி நட்சத்திரம் போலக் கணவன் செல்லும் மார்க்கத்தின்படி நீயும் செல்க என மணமகட்கு அறிவிக்கக் கல்யாணத்தின்போது அவ் அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டுதல்
அருப்பம் = ஊர், காடு, பிட்டு, மோர், அருமை, கோட்டை, வழுக்கு நிலம், அரண், மலை மேல் கோட்டை, கள், நோய்
அருப்பு = தயிர், அரும்பு, துக்கம், கிளைத்தல், கொலை, காட்டரண்
அருமந்த = அருமையான தேவாமிருதம் போன்ற
அருமை = சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது, பெருமை, கொடுமை, சிறுமை
அரும்பு = மெல்லிய மயிர், பூவரும்பு





























அரும்பெறல் = பெறுவதற்கு அருமையான
அருவருத்தல் = வெறுத்தல்
அருவர் = தமிழர்
அருளிப்பாடு = அருளப்பட்ட உத்தரவு
அருள் = சத்தி, கருணை
அரை = வயிறு, ஒரு மரம், மேகலை
அரைக்காணி = நூற்றறுபதில் ஒரு பகுதி
அரைநாண் = இடுப்பில் கட்டும் கயிறு
அரைமா = நாற்பதில் ஒரு பாகம்
அரையன் - அரசன்
அரோசகம் = பசியின்மை, அருவருப்பு
அரோசிகம் = அருவருப்பு, ஒக்காளம்
அர்க்கம் = நீர்க்காகம், எருக்கஞ் செடி
அர்க்கன் = சூரியன்
அர்ச்சை = மூர்த்தி, மண் முதலியவற்றால் செய்யப்பட்ட விக்ரகம்
அர்த்த கங்கை = காவேரி
அர்த்தம் = பொருள், சொற்பொருள், பாதி
அலகிடுதல் = கணித்தல், சீர் பிரித்தல், தூசுபோக்கல்