பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தறைதல்

210

தன்னையறிதல்


தறைதல் = இறுக்குதல், தட்டையாதல் தற்கரன் = கள்வன் தற்சனி = சுட்டுவிரல் தற்பதம் = கடவுள் தற்பரன் = கடவுள் தற்பம் = கருவம், பாவம், மேல்நிலை, மனைவி, துயிலிடம் தற்போதம் = தன்னறிவு தற்றுதல் = இறுக உடுத்துதல் தனகு = மனமகிழ்ச்சி தனஞ்சயன் = அருச்சுனன், தீ, ஒரு வாயு தனதன் = குபேரன் தனபதி = குபேரன் தனம் = தனமை, பாென், சம்பத்து, வருத்தம், பசுக்கன்று, மூலை, சந்தனம் தனயன் = மகன் தனயை = மகள் தனாதிபதி = குபேரன் தனி = ஒப்பின்மை, தனிமை தனிகன் = செல்வன் தனிசு = கடன் தனிட்டை = அவிட்டம் தனிதம் = முழக்கம் தனிநிலை = ஆய்த எழுத்து தனிமுதல் = கடவுள் தனிமை = உவமை இன்மை தனியன் = தனிப்பாடல் தனிவீடு - மோட்சம் தனு = ஒர் இராசி, உடல், சிறுமை, வில் தனுசன் = மகன், அசுரன் தனுசு = வில் தனை = அளவு, எண் தன்மாத்திரை = பொறிகளின் மூலம், சுவை, ஒளி,ஊறு,ஓசை நாற்றம் என்னும் மூலப்பாெருள்கள் தன்மேம்பாட்டுரை = தற்புகழ்ச்சி தன்வழி = தன்பொறுப்பு, தன்னம் = அற்பம், மரக்கன்று தன்னியம் = முலைப்பால் தன்னியன் = தனவான், தீவினை நீங்கினவன் தன்னுதல் = பொருந்துதல், சிறிது சிறிதாக எடுத்தல், மெல்லத்தள்ளுதல் தன்னை = தாய், தமயன், தமக்கை தன்னையறிதல் = ஆத்ம தரிசனம்,