பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தா

தா = பரப்பு, கொடு, கேடு, பகை, வருத்தம், வலி, பாய்தல், குற்றம்
தாகம் = ஆசை, எரிவு
தாகன் = தியாகன்
தாக்கணங்கு = இலக்கு மி, காமநோய்தரும்தேவதை
தாக்கு = போர், இடம், அடி,தடி, மிகு பாசம்
தாங்கல் = நீர், நிலை, பூமி, துன்பம், சகிப்பு
தாங்கி = ஆதாரம்,பூண்
தாங்குதல் = அணைத்தல், பொறுத்தல், படகு தள்ளுதல், விலக்கிப் போதல்
தாசரதி = இராமன்
தாசன் = செம்படவன், அடிமையாள்
தாசி = பரணி நாள், அடிமை, நாடகக்கணிகை
தாசேரம் = ஒட்டகம்
தாடங்கம் = காதணி,
தாடனம் = அடித்தல், தட்டுதல்
தாடாண்மை = முயற்சி
தாடு = வலிமை தலைமை,
தாட்சாயணி = தட்சன் மகள், பார்வதி
தாட்டானை = கிழக்குரங்கு
தாட்டி = தைாியம், சாமா்த்தியம்
தாட்டிகம் = அகந்தை, பலம்
தாட்படை = கோழி
தாணு = நிலைபேறு, தாவரம், சிவன், தூண், மலை
தாண்டவம் = கூத்து
தாண்டவராயன் = நடராசன்
தாதகி = ஆத்திமரம்
தாதச்சி = தவப்பெண்
தாதமார்க்கம் = தொண்டு வழி
தாதன் = தந்தை, அடிமை
தாதா = பாட்டன், பிரமன், வள்ளல்
தாதத்மியம் & தாதான்மியம் = ஒருமைப்பட்டிருத்தல்
தாது = காவிக்கல், சுக்கிலம், உலோகம், காடி, தேன், சொல்லின் மூலம், சக்தி, நீறு, பகுதி, பூந்தாது, பொடி, சாணம்
தாதை = தந்தை, பிரமன், பாட்டன்
தாத்திரி = பூமி, தாய்
தாபசன் = தவசி
தாபத நிலை = கைம்மை நோன்பு
தாபதம் = முனிவர் வாழ்க்கை
தாபதா் = முனிவா்
தாபந்தம் = வேதனை