பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தானிகன்

214

திண்மை




  
தானிகன் = பூசாரி
தானை = சேனை, ஆயுதம், ஆடை
தான்றி = எல்லை, ஒரு மரம்
தான்றோன்றி = சுயம்பு, பிறரால் உண்டாக்கபடாதவன்

தி


திகதி = தேதி
திகந்தம் = திசையின் முடிவு
திகம்பரன் = நிருவாணி, சிவன், அருகன்
திகழ்தல் = விளங்குதல், ஒளி செய்தல்
திகிரி = சக்கரம், தேர், மலை, மூங்கில், வட்டம், சூரியன்
திகை = திசை, தேமல்
திக்கசம் = திசை, யானை
திக்காரம் = நிந்தை
திக்கு = சமயம், திசை, புகலிடம்
திக்குவிசயம் = எல்லாத் திசைகளையும் வெல்லல்
திங்கள் = திங்கட்கிழமை, சந்திரன், மாதம்
திசைச்சொல் = தமிமும் சமஸ்கிருதமும் அல்லாத வேற்றுமொழிச் சொற்கள்
திசைமுகன் = பிரமன்
திடகாத்திரம் = கட்டுள்ள தேகம்
திடப்பிரஞ்ஞன் = சீவன்முத்தன்
திடர் = மலைமேடு, மணற்குன்று, வெளியிடம்
திடல் = வெளியிடம்
திட்டாணி = மரத்தைக் சுற்றிய மேடை
திட்டி = கண் திஷ்டி, மேடு
திட்டிவாயில் = ஒடுக்கவாயில்
திட்டை = உரல், திண்ணைமேடு
திட்பம் = திண்மை, மனவுறுதி
திணர் = செறிவு
திணுக்கு = நடுக்கம்
திணை = ஒழுக்கம், நிலம், குலம், வீடு
திண்டி = யானை, பருமம்
திண்டிமம் = தம்மட்டம்
திண்டிறல் = மிக்க வீரம்
திண்ணகம் = செம்மறிக் கடா
திண்ணக்கம் = வலி
திண்ணம் = வலி, இறுக்கம், உறுதி
திண்மை = ஊறுதி, வலி