பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரிகூடம்

216

திருப்பணி


  
திரிகூடம் = ஒருமலை
திரிகை = எந்திரம், குயவன் சக்கரம்
திரிசிகை = சூலம்
திரிசொல் = செய்யுள் சொல்
திரிதல் = வேறாதல், கெடுதல், சலித்தல், கைவிடுதல்
திரிநயனன் = சிவன்
திரிபதகை = கங்கை
திரிபதார்த்தம் = பதி, பசு, பாசம்
திரிபலை = கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய்
திரிபிடகம் = பெளதாகமங்கள்
திரிபு = விபரீதம், விகாரம்
திரிபுடி = ஞாதுரு, ஞானம், ஞேயம்
திரிபுண்டரம் = மூன்று வரிசையாகத் திருநீற்றை அணிதல்
திரிபுரம் = இரும்பு, வெள்ளி, பொன்னால் ஆன இயங்கும் கோட்டை
திரிபுராந்தகன் = சிவன்
திரிபுரை = பார்வதி
திரிபுவனம் = சுவர்க்கம், மத்திமம், பாதளம்
திரிமூர்த்தி = பிர்மா, விஷ்ணு, ருத்திரன்
திரியக்கு = விலங்கு, குறுக்கானது
திரியம்பகம் = சிவன் வில்
திரிவிக்ரமன் = திருமால், சூரியன்
திரிலோசனன் = முக்கண்ணுடைய சிவன்
திரியம்பகன் = முக்கண்ணுடைய சிவன்
திரு = அழகு, இலக்குமி, ஸ்ரீ, கண்டாரால் விரும்பப்படும் தன்மை, செல்வம், தெய்வீகம், நல்ஊழ்
திருக்கம் = வளைவு, வஞ்சகம்
திருகியம் = தோற்றமுள்ளது
திருச்சிற்றம்பலம் = சிதம்பரத்தில் உள்ள சபை
திருடதை = உறுதி
திருடம் = பலம்
திருடாத்தம் = சாத்திரம், உதாரணம்
திருட்டி = கண், பார்வை
திருமணம் = புல், துரும்பு
திருணபதி = பனை
திருதி = உறுதி
திருத்தம் = தீர்த்தம், ஒழுங்கு
திருநீற்றுக்கோவில் = திருநீற்றுப் பை
திருந்தலர் = பகைவர்
திருந்தார் = பகைவர்
திருப்பணி = கோயில் வேலை