பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அலகு

19

அலைவாய்


அலகு = அளவு, சோதிடம், துடைப்பம், நெற்கதிர், பலகறை, பறவை மூக்கு, கொதுகு, வீட்டின் உறுப்பு
அலகை = பேய், கற்றாழை, தலையளவு
அலகைத்தேர் = கானல் நீர்
அலக்கண் = துன்பம்
அலக்கு = வரிச்சு, துறட்டுக்கோல், தனிமை
அலங்கடை = அல்லாத இடத்து
அலங்கம் = அரண், கொத்தளம்
அலங்கல் = அசைதல், ஒளிர்தல், தளிர், பூமாலை, மனங் கலங்கல்
அலங்கை = துளசி
அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு
அலத்தி = மின்மினி
அலந்தலை = துன்பம்
அலந்தை = குளம், துன்பம்
அலந்தவர் = துன்புற்றவர், தரித்திரம் உற்றவர்
அலமரல் = சுழலுதல், துயருறுதல், அசைதல்
அலம் = சஞ்சலம், கலப்பை, நீர், தேள்
அலம்பல் = ஒலித்தல்
அலம்பு = வறுமை
அலரவன் = பிரமன்
அலரி = அழகு, கண்வரி, சூரியன், ஒரு மரம், பூ, தேனீ, நீராவி, கோதுமை
அலர் = தூற்றும் பழி, பழிச்சொல், மகிழ்ச்சி,பூ
அலவர் = உழவர்
அலவலை = அற்பன், புலம்பல், கலக்கம்
அலவன் = சந்திரன், நண்டு
அலவாங்கு = கடப்பாரை
அலவாட்டு = வழக்கம்
அலவு = மனத்தடுமாற்றம்
அலவுதல் = அலைதல், சுழலல், சிந்துதல்
அலவை = வியபிசாரம்
அலாதம் = கரி, கொள்ளி
அலாயுதன் = கலப்பைப் படையுடைய பலராமன்
அலி = பலதேவன், உழுவோன், வைரமில்லா மரம், பேடு, யமன்
அலிகம் = நெற்றி
அலுத்தசத்தி = பேரருளுடைமை
அலை = கடல், கொலை, அலை, வருத்துகை
அலைமகள் = இலட்சுமி
அலைவாய் = திருச்செந்தூர்