பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருப்பதி

217

திலதம்




  
திருப்பதி = திருவேங்கடமலை
திருப்பள்ளி = இறைவன் பள்ளி கொண்டிருத்தல்
திருமகள் = இலக்குமி
திருமஞ்சனம் = அபிடேகம், திருமுழுக்கு
திருமண் = நாமம்
திருமரம் = அரசமரம்
திருமலா் = தாமரை
திறுமறுமாா்பன் = திருமால், அருகன்
திருமால் = அரசன், விஷ்ணு
திருமுகம் = பொியோர் கடிதம்
திருமுறை = நூல், சைவத்திருமுறைகள்
திருமுற்றம் = கோயிற் சந்நிதானம்
திருமுன் = சந்நிதானம்
திருமுழுக்கு = அபிடேகம்
திருமை = அழகு
திருனாபரணம் = தெய்வத்திற்குரிய நகை
திருவாய் மலர்தல் = சொல்லுதல்
திருவாழ்த்தான் = விகடன்
திருவாளன் = செல்வன்
திருவிளையாட்டு = தெய்வவிளையாட்டு
திருவுரு = தெய்வ விக்கிரகம்
28-29
திருவுளச் சீட்டு = தெய்வத்தின் உள்ளம் அறிய அமைக்கப்படும் சீட்டு
திருவுளம்பற்றுதல் = கிருபை பாலித்தல்
திருவோலக்கம் = தெய்வ சபை
திரை = அலை, வெற்றிலை, உடலில் தோன்றும் மூப்புக் குறி, திரைச் சிலை, சுருள்
திரைதல் = சுருங்குதல்
திரையல் = வெற்றிலை, சுருங்கல்
திரையன் = தொண்டைமான், நெய்தல் நிலத் தலைவன்
திரையெறிதல் = அலைவீசுதல்
திரை விழுதல் = உடல் சுருங்குதல்
திரோதம் = மறைப்பு
திரோதான சக்தி = மறைப்புச் சத்தி
திரோதானம் = மறைப்பு
திரோபவம் = மறைப்பு, இறைவனது ஐந்துதொழில்களில் ஒன்று
திலகம் = பொட்டு, முதன்மையானது
திலகடம் = எள்ளுப்பிண்ணாக்கு
திலதம் = சுட்டி