பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திலதர்ப்பணம்

218

தின்றி


திலதர்ப்பணம் = எள்ளும் நீரும் இறைத்தல்
திலம் = எள்
திலோதகம் = எள்ளும் நீரும் .
தில்லம் = காடு
தில்லை = சிதம்பரம், ஒருமரம்
தில்லை மூவாயிரவர் = சிதம்பர தீட்சதர்கள் மூவாயிரவர்
தில்லையம்பலம் = பொற்சபை
திவசம் = நாள், திவசம்
திவம் = வானம், பரமபதம்
திவலை = துளி, மழை
திவவு = படி, வீணையின் முறுக்காணி
திவளுதல் = அசைதல், துவளுதல், விளங்குதல், வாடுதல், திளைத்தல்
திவா = பகல், நாள்
திவாகரன், திவாமணி = சூரியன்
திவி
= சுவர்க்கம்
திவ்யசட்சு = ஞானக்கண்

திவ்வியம் = இனிமையானது, தெய்வீகமானது, மேன்மையானது

திளைத்தல் = அசைதல், விளையாடல், அனுபவித்தல், அழுந்துதல், நிறைதல், விடாது பயிலல், மகிழ்தல், பொருதல்
திறத்தார் = பக்கத்தார்
திறப்பாடு = வகை
திறம் = காரணம், நரம்புள்ள வீணை, கூறுபாடு, சுற்றம், குலம், பக்கம், போர்வகை, வலி, வழி, வரலாறு, ஒழுக்கம், மேன்மை, இயல்பு, செவ்வை, கற்பு, செய்தி, உபாயம், செல்வம், வல்லமை
திறம்புதல் = தவறுதல், மாறுபடுதல்
திறல் = பகை, வலி,வெற்றி, ஒளி
திறை = அரசர்க்குக் கொடுக்க வேண்டிய கப்பம்
திற்றி = தின்னற் குரியது இறைச்சி
தினகரன், தினநாதன்,தினமணி = சூரியன்

தினம் = நட்சத்திரம், நாள்
தினை = சிறுமை, தினையரிசி
தின்மை = தீமை
தின்றி = உணவு