பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீவிரம்

220

துடியடி


தீவிரம் = கூர்மை, கடுமை,விரைவு
தீவேட்டல் = யாகம் செயதல், கலியாணம்
தீவேள்வி = கலியாணம்
தீழ்ப்பு = கீழ்மை, தீட்டு
தீற்றுதல் = பூசுதல், ஊட்டுதல், தூய்மை செய்தல்
தீனபந்து = கடவுள்
தீனம் = வறுமை, நோய்,நட்பு
தீனன் = தரித்திரன், யாசகன்

து

து = அனுபவம், சுத்தம், உணவு
துகத்தல் = கசத்தல்
துகள் = குற்றம், தூசு, பூந்தாது
துகி = மகள்
துகிர் = பவளம்
துகிலிகை = எழுதுகோல், சித்திரம்
துகில் = பட்டு, சீலை, துகில்கொடி
துகினம் = பனி, சந்திரகிரணம்
துகிற்கிழி = உறை
துகினம் = பனி
துகைத்தல் = வருத்தல், உழத்தல், சஞ்சரித்தல்
துகின் மனை = கூடாரம்
துக்கம் = துன்பம், வான்
துக்கரம் = செய்தற்கரியது
துங்கம் = உயர்ச்சி, மலை,பெருமை, வெற்றி, ஆகிலம், முதன்மை
துச்சம் = கீழ்மை, பதர், பொய், நிலையின்மை
துச்சில் = ஒதுக்கிடம்
துஞ்சுதல் = இறத்தல், தூங்குதல், நிலைபெறுதல், தொங்குதல், குறைதல், சோம்புதல்
துஞ்சுநிலை = கட்டில்
துடக்கு = கட்டு, மகளிர் சூதகம்
துடவை = சோலை, தோட்டம், விளைநிலம்
துடி = அகில், ஏலம்.உடுகை, வேகம், காலநுட்பம், வலி, மயிர்ச்சாந்து, உதடு, பாலைநில வாத்தியம்
துடிதலோகம் = தேவலோகம்
துடியடி = யானைக் கன்று