பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துடியிடை

221

துமிதம்


துடியிடை = பெண், உடுக்கை போன்ற இடையுடைய பெண் துடுப்பு = பூவரும்பு, அகப்பை, காந்தள்மலர் துடும்புதல் = கூடுதல் துடுவை = நெய்த் துடுப்பு துட்கு = அச்சம் துட்டநிக்கிரகம் = துஷ்டரை அழித்தல் துட்டு = தீமை, பணம் துணங்கறல் = திருவிழா, இருள் துணங்கை = ஒருவகை ஆடல் துணர் = பூ, பூங்கொத்து, பூந்தாது, பழக்குலை துணி = துண்டு, சீலை துணிதல் = வெட்டுதல், தெளிதல், நீங்குதல் துணித்தல் = வெட்டல், கிழித்தல் துணியல் = துண்டம் துணுக்கம் = அச்சம், நடுக்கம் துணை = அளவு, இணை உதவி, ஒப்பு துணைமை = பிரிவின்மை ஆற்றல், உதவி துணையல் = பூமாலை துணைவன் = தோழன் துணைவி = மனைவி, தோழி துண்டம் = சாரைப்பாம்பு, முகம், பறவை மூக்கு, மூக்கு, துதிக்கை, பிரிவு துண்டி விநாயகர் = காசியில் உள்ள கணபதி துண்டீரன் = காஞ்சியரசன் துதம் = அசைவு துதி = துளை, தோத்திரம், புகழ், நுனி, துருத்தி துதைதல் = நெருங்குதல், மிகுதல், படிதல் துத்தம் = வயிறு, ஏழிசை களில் ஒன்று சமனிசை, பால், நாய் துத்தி = தேமல், பாம்பின் படப்புள்ளி, யானைப்புகர்

 துத்தியம்  = துதி, புகழ்ச்சி 

துந்தம் = வயிறு துந்தி = நாபி, வயிறு துந்திபி = தெய்வலோகபேரிகை துப்பு = பவளம், வலிமை, அனுபவம், ஆயுதம், உளவு, சுத்தம், துணை, அறிவு, தன்மை, நெய், வலி, நன்மை, பொலிவு, மெழுகு, முயற்சி, அனுபவிக்கக் கூடிய பொருள், பகை, கருவி, உணவு துப்புரவு = சுத்தம், முழுமை, அனுபவம், சமர்த்து துமி = சிறு திவலை, வெட்டு துமிதம் = நீர்த்துளி