பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துருவம்

223

துவர்த்தல்


துருவம் = அசையா நிலை, ஒப்பு, துருவ நட்சத்திரம் துருவல் = ஆராயதல் துருவாடு = செம்மறியாடு துருவுதல் = கடைதல், தேடுதல், ஆராயதல் துருவை = ஆடு, பார்வதி துரூஉ = செம்மறியாடு துரோணம் = காக்கை,சரபப்பட்சி,வில்,தும்பைச் செடி, பதக்கு துர்க்கம் = அரண், மலைக் கோட்டை துர்க்கை = பார்வதி, காளி, வீரமகள் துர்த்திநம் - மழைநாள், கெட்டநாள் துர்பிட்சம் = பஞ்சம் துர்லபம் = கிடைப்பதற்கு அருமையானது துலக்கம் = ஒளி, தெளிவு துலங்குதல் = விளங்குதல்,சிறத்தல் துலா = ஏற்றமரம், நிறை கோல், ஒப்பு, அளவு, தராசு துலாபாரம் = தன் அளவுக்குப் பொன் கொடுக்கத் தன்னை நிறுத்தல் துலாம்பரம் = தெளிவு,விளக்கம் துலை = ஒப்பு, அளவு, தூரம்,தராசு, தோட்டம் துல்லபம் = அருமை, எட்டாதது துல்லிபம் = மேன்மை துல்லியம் = உவமை, ஒப்பு,சுத்தம் துவக்கு = உடல், கட்டு, தோல், சங்கிலி, பற்று, தொடர்பு துவசம் = கொடி, அடையாளம் துவசர் = கள் விற்பவர் துவசாரோகணம் = திருவிழாவின் போது கொடியை ஏற்றல் துவடர் = பகைவர் துவட்சி = வாடுதல், சோர்வு துவட்டா = விஸ்வகர்மா துவந்தனை = அலைவு, தடை,பந்தம் துவம் = அசையா நிலை,இரண்டு துவயம் = இரண்டு துவர = மிக துவரை = துவாரகாபுரி துவர் = சிவப்பு, பவளம்,துவர்ப்பு, விறகு துவர்க்காய் = பாக்கு துவர்தல் = முதிர்தல், பிரிதல், உலர்தல், புலா்த்துதல், வகிர்தல் துவர்த்தல் = சிவத்தல், பூசுதல்