பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துவலை

224

துறை போதல்


  
துவலை = மழை, துளி, கூட்டம்
துவளுதல் = அசைதல், அடர்தல், வாடல், வளைதல், துடித்தல், வருந்துதல்
துவனம் = ஒலி
துவனி = ஒலி
துவன்றல் = நெருங்கல், நிறைதல்
துவாதசம் = பன்னிரண்டு
துவாந்தம் = இருள், நரகம்
துவார பாலகர் = வாயில் காவலர்
துவாரம் = வாயில், வழி, மூலம், தொகை
துவாலை= இரத்தப் பெருக்கு
துவி = இரண்டு
துவிசன் = இருபிறப்பானவன்
துவிதம் = இரண்டு
துவிதவாதி = கடவுளும் ஆன்மாவும் வேறு என வாதிக்கும் ஒரு சமயவாதி
துவை = ஒலி, புளியங்கறி, மிதித்தல், இறைச்சி, பிண்ணாக்கு, துவையல்
துவைதம் = கடவுளும் உயிரும் வேறு என்பது
துவைத்தல் = ஆரவாரித்தல், கடைதல், இடித்தல், குற்றுதல், சேர்த்து வைத்தல், புகழப்படுதல்,ஒலித்தல்
துளக்கம் = அசைவு, வருத்தம், ஒளி,அச்சம், கலக்கம்
துளங்கல் = ஒளி செய்தல், தளர்தல்
துளவம் = = துளசி
துளவு = துளசி
துளர் = பயிரின் களை
துளர்தல் = மணத்தல்,கொத்துதல்
துளும்பல் = கலக்குதல்
துளை = மூங்கில்
துளைதல் = அனுபவித்தல், அழுத்திக்கிடத்தல், நீர்விளையாடல்
துள்ளல் = ஆடு, கொசுகு, விரைந்து பாடும் இசை, கூத்து
துறக்கம் = தேவலோகம்
துறத்தல் = பற்றுதல், நீக்கல், கைவிடல்
துறவறம் = இல்லறத்தை விட்டு நீங்கிய நிலை
துறுதல் = நெருங்குதல், குவிதல், அடைதல்
துறுமல் = திரட்சி
துறுமுதல் = நெருங்கல், திரட்டல்
துறுவுதல் = உண்ணல்
துறை = ஆறு, இடம், நூல்,வழி, கடற்கரை, ஒழுங்கு, நீர்த்துறை, உபாயம்
துறைபோதல் = முற்றக்கற்றறிதல், முடிவறிதல்