பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தூடணம்

226

தூளி


  
தூடனம் = நிந்தனை
தூணம் = அம்புக்கூடு, துாண்
தூணி = அம்புக்கூடு, நாலு மரக்கால்
தூது = பருக்கைக்கல், செய்தி, தூதர்
தூதுணம் = புறா
தூதை = மட்கலம், மரப்பானை
தூபம் = புகை
தூபி = மலைமுடி, உச்சி
தூபிகை = கோவில சிகரம்
தூமகேது = அக்னி, வால் நட்சத்திரம், விண்வீழ் கொள்ளி
தூமம் = சூளை, புகை
தூமை = சுத்தம்
தூம்பு = உள்துளை, ஏரி, மதகு, சாக்கடை, மரக்கால், மூங்கில், வாயில்
தூயம் = சுத்தமானது
தூயவர் = முனிவர்
தூய்மை = சுத்தம், முத்தி, நன்மை
தூரதரிசி = தீர்க்கதரிசி
தூரம் = வேறுபாடு, புறம்பு
தூரி = எழுதுகோல்
தூரிகை = எழுதுகோல்
தூரியம் = புகழ்ச்சிப்பறை, எருது, எழுதுகோல், நல்லாடை, வாத்தியம்
தூரியன் = துாரத்தில் உள்ளவன்
துார் = சேறு, வேர்
தூர்ச்சடி = சிவன்
தூர்த்தகுணம் = காமுகத் தன்மை
தூர்த்தல் = நிரப்புதல், அடைதல், பெருக்கிச் சுத்தம் செய்தல்
தூர்த்தன் = காமுகன், வஞ்சகன்
தூர்வகம் = சுமத்தல், பொதி எருது
தூர்வை = அறுகு
தூலசரீரம் = தசையுடன் கூடிய உடல், புற உடல்
தூலம் = ஆகாயம், பஞ்சு, பருமை, கண்ணுக்குத் தெரிவது
தூலலிங்கம் = கோபுரம்
தூலிகை = எழுதுகோல், அன்னத்தினிறகு
தூலித்தல் = பருத்தல்
தூவத்தி = வாள்
தூவல் = அம்பிறகு, சிந்தல் துளி, மழை, தூரியக்கோல், தளிர்
தூவானம் = மழைத் திவலை
தூவி = இறகு, மயில்தோகை, எழுதுகோல், தூபி
தூளி = புழுதி, பூந்தாது, குதிரை