உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தூளிதம்

227

தெய்வோபாசனை


  
தூளிதம் = திருநீறு, தூள்
தூறு = பழிச்சொல், புதர், குவியல், குறுங்காடு, சுடுகாடு, போர், தீங்கு
தூறுதல் = நிந்தித்தல், சிதறுதல், பழி சொல்லல், கிளைத்தல், பரவுதல்
தூற்றுதல் = பழிகூறல், சிதறல், அறிவித்தல், பரவுதல்

 
தெ


தெகிழ்தல் = விரிதல், நிறைதல், விளங்குதல்
தெக்கணம் = தெற்கு, வலப்பக்கம், தட்சணம்
தெக்கு = தெற்கு
தெக்குதல் = கொள்ளுதல்
தெங்கு = இனிப்பு, தென்னை
தெட்சணாமூர்த்தி = சிவன், அகத்தியன்
தெட்சிணம் = தெற்கு, வலப்பக்கம்
தெட்டுதல் = வஞ்சித்தல், அபகரித்தல்
தெட்டு = வஞ்சனை, பறித்தல்
தெட்பம் = பேரறிவு, தெளிவு, முதிர்ச்சி
தெண்டம் = வணக்கம், அபராதம், வீண்
தெண்டு = கோல், கற்றை
தெண்டித்தல் = முயற்சி எடுத்தல், தண்டித்தல்
தெண்டிரை = கடல்
தெண்டு = ஓணான்
தெண்ணர் = அறிவில்லாதவர்
தெண்மை = தெளிவு
தெம்முனை = போர்க்களம்
தெய் = கொலை, தெய்வம்
தெய்வகளை = தெய்வ விளக்கம்
தெய்வதம் = தெய்வம்
தெய்வப் புலமை = இறைவன் அருளால் வந்த பேரறிவு
தெய்வம் = விதி, கடவுள்
தெய்வவீடு = விமானம்
தெய்வவுத்தி = சீதேவி என்னும் தலையலங்காரம்
தெய்வாதீனம் = தெய்வதிற்கு அடங்கியது, தெய்வ சுதந்திரம்
தெய்விகம் = தெய்வ சம்பந்தமானது, தெய்வத்தன்மை
தெய்வோபாசனை = தெய்வ வழிபாடு