பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெறுதல்

229

தேக்கம்




  
தெறுதல் = அழித்தல், சுடுதல், வருத்துதல், கப்பம் செலுத்தல், சொல்லல், தண்டனை, அச்சுறுத்தல், செய்தல், கொல்லுதல், பகைத்தல், காய்ச்சுதல்
தெறுநர் = பகைவர், கொலையாளிகள்
தெறுழ் = ஒருவகைத் தாவரக் கொடி
தெற்றி = திண்ணை, மேட்டிடம்
தெற்றியம்பலம் = சித்திரக்கூடம்
தெற்று = தடைப்படுதல்
தெற்றுதல் = பின்னல், மாறுபடல், பிணங்குதல், தடுத்தல், தடைப்படுதல் அலைத்தல், கொடுத்தல்
தெற்றென = தெளிய, விரைவாக
தெனாது = தெற்குளது
தென் = அழகு, தெற்கு, இசை, இனிமை
தென்கலை = தமிழ்
தென்கால் = தென்றல் காற்று
தென்பாரிசம் = தென்திசை
தென்பால் = தென்பக்கம்
தென்புலத்தார் = பிரமனால் படைக்கப்பட்ட ஒரு கடவுள் சாதியார், பிதுரர், தென்திசையில் வாழ்பவர்
தென்புலம் = இயம உலகம், பாண்டிய நாடு, பிதுரர் உலகம்
தென்புறம் = தென்பக்கம்
தென்மலை = பொதியமலை
தென்றற்றேரோன் = மன்மதன்
தென்றி = தென்றல், தெற்கு
தென்றிசைக்கோன் = இயமன்
தென்றுதல் = இனம்பிரிதல், சிதறுதல்
தென்னவன் = இயமன், பாண்டியன், இராவணன்
தென்னுதல் = கிளம்புதல்

தே


தே = கடவுள், கொள்கை, நாயகன்
தேகவியோகம் = சாவு
தேககாந்தி = சரீரஒளி
தேகாந்தம் = சாவு
தேகி = சீவாத்மா
தேக்கம் = தியக்கம், ஏப்பம், கவலை, நிறைவு