பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேக்கிடுதல்

230

தேவசேனாபதி


  
தேக்கிடுதல் = நிறைந்து வழிதல்
தேசசு = ஒளி, அழகு, விந்து
தேசவியவகாரம் = தேச வழக்கம்
தேசன் = குரு
தேசாதிபத்தியம் = தேசத்தை ஆளும் அதிகாரம்
தேசாந்தரம் = பரதேசம்
தேசாந்திரி = பரதேசி
தேசி = ஒரு கூத்து, அழகு, பெரிய குதிரை
தேசிகம் = ஒரு கூத்து, ஒரு நாட்டுச் சொல், அழகு, ஒளி, பொன், திசைச் சொல்
தேசிகன் = குரு, ஆசிரியன், தந்தை
தேசியம் = அந்த நாட்டு பாக்ஷை
தேசு = அழகு, ஒளி, புகழ், வீரம், ஞானம், பெருமை, பொன்
தேசோமயம் = ஒளிவடிவம், பேரொளி
தேசோரூபம் = ஒளியுருவம்
தேட்டம் = கவலை, ஆராய்வு, விருப்பம், பேராசை, சேகரிப்பு
தேண்டுதல் = தேடுதல்
தேத்தடை = தேன்கூடு
தேமா = இனிப்பு மாமரம்
தேம் = இனிமை, இடம், தேன், வண்டு, மணம்
தேம்பல் = வாட்டல், பழம், பூ
தேம்புதல் = மெலிதல், வாடல், தேய்தல்
தேயம் = கொடைப்பொருள், தேசு, இடம், நாடு, களவு, உடல்
தேயன் = திருடன்
தேயு = தீ, மயக்கம்
தேய்மானம் = பொன்னுரை
தேய்வை = சந்தனக் குழம்பு
தேரர் = புத்த முனிவர்
தேரார் = படிக்காதவர், பைகைவர், தேரார்
தேரலர் = பகைவர்
தேரி = மணல் திட்டை
தேர்ச்சி = கல்வியறிவு, ஆராய்தல், எண்ணல்
தேர்ச்சித்துணைவர் = மந்திரி
தேர்தல் = அறிதல், ஆராய்தல், நிச்சயித்தல், தேடுதல்
தேர்த்தல் = கலத்தல்
தேர்வு = ஆராய்ச்சி, சுவை, பயிற்சி
தேவகுலம் = கோவில்
தேவசேனாபதி = முருகப்பெருமான்