பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேவதாயம்

231

தேன்


  
தேவதாயம் = கோவிலுக்கு விடப்பட்ட நிலம்
தேவதேவன் = மகாதேவன், சிவன்
தேவதை = பேய், தெய்வம்
தேவநகர் = கோவில்
தேவபாடை = சமஸ்கிருத பாஷை
தேவபாணி = தேவரை வாழ்த்தும் பாட்டுவகை
தேவமணி = குதிரைக்கழுத்துச் சுழி
தேவயானம் = விமானம்
தேவரன் = கணவனுடன் பிறந்தவன்
தேவராட்டி = மருள் வந்து ஆடுபவள, குறி சொல்பவள்
தேவர் = உயர்ந்தவர், மறவர் பட்டப் பெயர், வள்ளுவர், தேவர்
தேவர்கோன் = இந்திரன்
தேவலன் = முனிவன், பூசாரி
தேவவிரதன் = பீஷ்மன்
தேவன் = அரசன், கடவுள், மறவர், அகம்படியர்
தேவாங்கம் = பட்டுச் சீலை
தேவாரம் = வீட்டில் வைத்துப் பூசிக்கத்தக்கது, அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய சைவசமய ஆசிரியர்கள் பாடியதோத்திர நூல், தேவனுக்குரிய பாமாலை
தேவி = பார்வதி, அரசி, மனைவி, தலைவி
தேவு = தெய்வம்
தேவை = இராமநாதபுரம்
தேறலர் = பகைவர், அறிவிலார்
தேறல் = தேன், தெளிவு, சாரம்
தேறார் = பகைவர், அறிவிலார்
தேறு = தேற்றாமரம், உறுதி, துண்டு, தெளிவு, கொட்டுதல்
தேறுதல் = தெளிதல், முதிர்தல், நம்புதல், துணிதல்
தேற்றம் = துணிவு, தெளிவு, நிச்சயம், உண்மை, அறிவு
தேற்றார் = பகைவர்
தேனன் = திருடன்
தேனித்தல் = இனித்தல்
தேனிறால் = தேன்கூடு
தேனு = தெய்வப்பசு, பசு, எருமை, குதிரை
தேன் = கள், வண்டு,வாசனை