பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொலைவு

234

தோடகம்


  
தொலைவு = அழிவு, தோல்வி
தொல்லை = பழமை
தொல்வினை = விதி, பழவினை
தொழித்தல் = கோபித்தல், ஆரவாரித்தல், சிதறல்
தொழில் = சாமர்த்தியம், வேலை, செயல்
தொழிற்றுறை = வியாபாரம்
தொழு = குஷ்டம், இரேவதி, இல்வாழ்க்கை, பட்டி, மடு, பசுக்கொட்டில், சிறை
தொழுகுலத்தோர் = அந்தணர்
தொழுதி = கூட்டம், திரட்சி
தொழுத்தை = அடிமைப் பெண், அடிமை
தொழுநோய் = குஷ்டரோகம்
தொழுந்தகை = தொழத்தக்கவன்
தொழும்பர் = குற்றேவல் செய்வோர், இழிஞர்
தொழும்பு = தொண்டு
தொழுவர் = உழவர், தொழில் செய்பவர்
தொழுனை = யமுனையாறு
தொளி = சேறு, வீதி
தொள்கு = சேறு, வலை, பள்ளம்
தொள்ளை = துளை, மரக்கலம், குழி, குற்றம், அறியாமை
தொறு = கூட்டம், பசுக்கூட்டம், இடைச்சாதி, தொழு
தொறுச்சி = இடைச்சி
தொறுவர் = இடையர்
தொறுவி = இடைச்சி
தொற்று = ஒட்டு, பற்று
தொற்றுதல் = பற்றுதல், ஒட்டுதல், ஏறுதல்
தொனி = ஒலி
தொனித்தல் - குறிப்புப் பொருள் தோன்றுதல், ஒலித்தல்
தொன்மரம் = ஆலமரம்
தொன்மை = நூலின் ஒர் அழகு, பழமை
தொன்று = ஊர், பழமை
தொன்னீர் = கடல்

தோ


தோகம் = சிறுமை, பால், துக்கம்
தோகை = மயில், மயிற்பிலி, மயிர்வால், முன்தானை, ஆடை, பொன்
தோகையர் = பெண்கள்
தோக்கை = மேற்போர்வை, சீலை, தோகை
தோடகம் = கொப்புளம், தாமரை