பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோடம்

235

தோற்றுவாய்


  
தோடம் = பாவம், குற்றம், சன்னி
தோடு = கூட்டம், பூ இதழ், குடுமி, தொகுதி, ஒரு காதணி, பழ ஒடு, ஒலை
தோட்கோப்பு = கட்டுச்சோறு
தோட்சுமை = காவடி
தோட்டி = அழகு, கதவு, காவல், அங்குசம், ஆணை, வெட்டியான்
தோணி = படகு, அம்பு, நீர், இரேவதி நாள், கப்பல், மதில் உறுப்பு, சேறு, நீர்த்தொட்டி
தோணாக்கம் = ஒருவகைக் கூத்து, மகளிர் விளையாட்டு
தோண்டான் = ஒநாய்
தோதகம் = வஞ்சகம், வருத்தம், ஒழுக்கமின்மை
தோது = தொடர்பு, தொகுதி
தோப்பி = நெல்லால் செய்யப்பட்ட கள்
தோமரம் = இருப்புலக்கை, கைவேல், தண்டாயுதம், வாத்தியம்
தோம் = குற்றம், தீமை, பாவம், துன்பம்
தோயதரம் = மேகம்
தோயதி = கடல்
தோயம் = நீர், கடல்
தோய்தல் = முழுகுதல், நனைதல், உறைதல், செறிதல், பொருந்துதல்,
ஒத்தல், முகத்தல், கலத்தல்
தோரணம் = குரங்கு, யானை நடை, அலங்கார முகப்பு
தோரணி = வரலாறு, பரம்பரை
தோரனை = நடை, முறை
தோரியமடந்தை = கூத்துப்பெண்
தோரியம் = கூத்து
தோரை = மூங்கிலரிசி, மலைநெல், பொன்மாலை, இரத்தம், தோகை விசிறி
தோலடிப்பறவை = அன்னம்
தோல் = சருமம், யானை, கேடகம், தோல்வி, துருத்தி, ஆழகு, புகழ், சிறந்த பொருள் தரும் மெல்லென்ற சொல்
தோழமை = நட்பு
தோழம் = தொழுவம், கடல், பேரெண்
தோழ் = தொழுவம்
தோளாமணி = முழுமணி
தோற்றம் = தோன்றுதல், காட்சி, எண்ணம், வலி, பிறப்பு, உயர்ச்சி,
மேன்மை, பொலிவு, தன்மை
தோற்றரவு = வெளிப்படல்
தோற்றுவாய் = ஆரம்பம், பாயிரம்