பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நராதிபதி

240

நவரசம்


நராதிபதி = அரசன் நாிதல் = வருத்துதல் நரித்தல் = நிந்தித்தல். வருந்துதல், கெடுதல், மூப்பு, பெருமை, மரச் சொத்தை நரேசன் - அரசன் நரேந்திரன் = விஷ வைத்தியன், அரசன் நரை = எருது, கவரிமா, வெண்மை, பெருமை, வெண்மயிர், மூப்பு, மரச்சாெத்தை நரையான் = மீன்குத்திப் பறவை நலங்குதல் = வருந்துதல் நலம் = அழகு, இன்பம், உபகாரம், நன்மை, விருப்பம், உயர்வு, சிவப்பு, அன்பு, குணம், புகழ் நலம்பாராட்டுதல் = அலங்காித்து அழகைப் பாராட்டிப் பேசுதல் நலிதல் = மெலிதல், வருந்தல், நெருக்கல், அழிதல் நல்குதல் = ஈதல், விரும்பல், படைத்தல், வளா்த்தல், பயன்படுதல் நல்குரவு = தாித்திரம் நல்கூா்தல் = தாித்திரப்படல், துன்புறுதல் நல்ல = கடுமையான, அதிகமான, நன்மையான நல்லம் = கறுப்பு நல்லறம் = இவ்வாழ்க்கை நல்லாா் = பெண்கள், நல்லவா் நல்லாறு = நல்வழி நல்வினை = புண்ணியம் நவக்கிரகம் = சூாிய, சந்திர, அங்காரக, புதன், வியாழ, சுக்கிர, சனி, இராகு, கேதுக்களாக ஒன்பது கிரகங்கள் நவதானியம் = உளுந்து, எள்ளு, கடலை, காெள்ளு, சாமை, தினை, துவரை, நெல்லு, பயிறு ஆக ஒன்பது தானியங்கள் நவதி = தாெண்ணுாறு நவதை = புதுமை நவத்துவாரம் = இருகண் துளை, வாய், இரு நாசித்துளை, இரு செவித்துளை, மலங்கழிவாயில், சிறுநீா்கழிவாயில் ஆகிய ஒன்பது துளைகள் நவநீதம் = வெண்ணெய் நவமணி = ஒன்பது மணிகள் நவம் = புதுமை, கமலம், ஒன்பது, பூமி நவரசம் = காவியத்தில் அமைக்கப்படும் ஒன்பது சுவைகள்